Home /News /chennai /

சென்னை அண்ணா சாலையில் நள்ளிரவில் பைக் சாகசம் செய்த இருவர் கைது!

சென்னை அண்ணா சாலையில் நள்ளிரவில் பைக் சாகசம் செய்த இருவர் கைது!

பைக் சாகசம் செய்யும் இளைஞர்கள்

பைக் சாகசம் செய்யும் இளைஞர்கள்

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இரு சக்கர வாகனத்தை ஓட்டிய அந்த நபர்கள் குறித்து பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
சென்னையில் அண்ணா சாலையில் நள்ளிரவில் அபாயகரமாக பைக் சாகசத்தில் ஈடுபட்ட 2 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

கடந்த வியாழக்கிழமையன்று, சென்னை அண்ணா சாலையில் தேனாம்பேட்டையில் தொடங்கி அண்ணா மேம்பாலம் வரை இளைஞர்கள் சிலர், இருசக்கர வாகனத்தில் அபாயகரமாக சாகசம் செய்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இதுப்போன்று பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இரு சக்கர வாகனத்தை ஓட்டிய அந்த நபர்கள் குறித்து பாண்டி பஜார் போக்குவரத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமெராக்கள் மூலம் இருசக்கர வாகன பதிவு எண்ணை கண்டறிந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த வாகனத்தின் உரிமையாளர்கள் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த முகமது ஹாரிஸ்(19) மற்றும் முகமது சைபான்(19) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் நடத்திய விசாரணையில், பைக் சாகசங்களில் ஈடுபட்டு சமூக வலைதளங்களில் பிரபலமான ஹைதராபாத்தை சேர்ந்த பினோஜ் என்பவர் சென்னை அண்ணா சாலை வழியாக வருவதை அறிந்து, அவரைப் பார்க்க சென்றதாக தெரிவித்தனர்.

இதையும் வாசிக்க: பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தி ஓரினசேர்க்கையில் ஈடுபடுத்திய கட்டிட மேஸ்திரி போக்சோவில் கைது!

மேலும் பினோஜ், அண்ணா சாலையில் பைக் சாகசங்களில் ஈடுபடும்போது அதை தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் பினோஜுடன் இணைந்து அவர்களும் பைக் சாகசங்களில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து பைக் சாகசங்களின் ஈடுபட்ட பினோஜை பிடிக்க தனிப்படை போலீசார் ஹைதராபாத் விரைந்து உள்ளனர்.

 
Published by:Siddharthan Ashokan
First published:

Tags: Bike Riders, Chennai, Chennai Police

அடுத்த செய்தி