ஹோம் /நியூஸ் /சென்னை /

செல்போனில் ஆர்டர்.. ஃபாஸ்ட் ஃபுட் கடையில் கஞ்சா விற்பனை அமோகம் - சென்னையில் இருவர் கைது

செல்போனில் ஆர்டர்.. ஃபாஸ்ட் ஃபுட் கடையில் கஞ்சா விற்பனை அமோகம் - சென்னையில் இருவர் கைது

கஞ்சா விற்பனை செய்து கைதான 2 பேர்

கஞ்சா விற்பனை செய்து கைதான 2 பேர்

Chennai | அப்துல் கஃபாரை கைது செய்த போலீசார் துரித உணவகத்தில் சோதனை நடத்தி அங்கிருந்து 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

சென்னை ராயப்பேட்டை பகுதிகளில் செல்போன் தொடர்பு மூலம் ஆர்டர் பெற்று இருசக்கர வாகனத்தில் வந்து கஞ்சா விற்பனையில் இருவர் ஈடுபடுவதாக ராயப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் போலீசார் ராயப்பேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். மேலும், போலீசாரே வாடிக்கையாளர் போல் நடித்து கஞ்சா விற்பனையாளரின் தொடர்பு எண்ணில் அழைத்து 2500 ரூபாய் கூகுல் பே மூலம் செலுத்தி 50 கிராம் கஞ்சாவை ஆர்டர் செய்தனர்.

அதனடிப்படையில் கோபாலபுரம் மாநகராட்சி விளையாட்டுத் திடலில் வைத்து கஞ்சா டெலிவரி செய்ய வந்த நபரை கையும் களவுமாக போலீசார் கைது செய்தனர். மேலும் அவனிடம் இருந்து 2.250 கிலோ கஞ்சா மற்றும் 40, 000 பணம், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

பின்னர் அந்த நபரிடம் நடத்திய விசாரணையில் அவர் ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த முன்னா (எ) முன்வர் மியான் (45) என்பதும், தனது கூட்டாளியான அப்துல் கஃபார் (45) என்பவருடன் சேர்ந்து திரு.வி.க சாலையில் துரித உணவகம் நடத்தி வருவதும் தெரியவந்தது. பின்னர் அப்துல் கஃபாரை கைது செய்த போலீசார் துரித உணவகத்தில் சோதனை நடத்தி அங்கிருந்து 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

பின்னர் அப்துல் கஃபாரிடம் நடத்திய விசாரணையில் அசாமில் இருந்து கஞ்சா கடத்தி வரும் நபரிடம் இருந்து எழும்பூரில் வைத்து மொத்தமாக கஞ்சாவை வாங்கி துரித உணவகத்தில் பதுக்கி வைத்து செல்போன் மூலம் ஆர்டர் பெற்று இருசக்கர வாகனத்தில் சென்று விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. பின்னர் கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Also see... பொள்ளாச்சியில் சிக்கிய ரூ.5 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள் - போலீஸார் தீவிர விசாரணை

கைதானவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் அசாமில் இருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தி வரும் நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Cannabis, Chennai, Crime News, Ganja