முகப்பு /செய்தி /சென்னை / மின்சார ரயிலில் பட்டா கத்தியை தரையில் உரசி அடவாடி செய்த மாணவர்கள் கம்பி எண்ணும் சோகம்

மின்சார ரயிலில் பட்டா கத்தியை தரையில் உரசி அடவாடி செய்த மாணவர்கள் கம்பி எண்ணும் சோகம்

கம்பி எண்ணும் மாணவர்கள்

கம்பி எண்ணும் மாணவர்கள்

சென்னை புறநகர் ரயிலில் பட்டா கத்தியை தரையில் உரசி பயணிகளை பயமுறுத்திய கல்லூரி மாணவர்கள் 3 பேரை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர். 

  • Last Updated :
  • Chennai [Madras], India

சென்னை புறநகர் மின்சார ரயிலில் பயணம் மேற்கொண்ட கல்லூரி மாணவர்கள் சிலர் பட்டாக் கத்திகளை நடைமேடையில் உரசியபடி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சென்ற வீடியோ கடந்த வெள்ளிக்கிழமை சமூக வலைதளங்களில் வைரலானது.

இது தொடர்பாக கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மாநில கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் அருள் மற்றும் இரு மாணவர்கள் சிக்கினர். கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் அருள் உட்பட 3 பேரையும் கைது செய்து 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை கோட்ட ரயில்வே எஸ்.பி உமா செய்தியாளர்களிடம் கூறுகையில், முதற்கட்டமாக 3 பேரை கைது செய்துள்ளோம், மீதமுள்ள நபர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

Also Read : செல்வம் கொட்டும்... மந்திரவாதி பேச்சை கேட்டு 2 பெண்களை கழுத்தறுத்து நரபலி கொடுத்த கேரள தம்பதி

top videos

    ரயில்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஆயுதங்களுடன் குற்றச் செயல் புரிவோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது என்றும் அவர் எச்சரித்ததார். ஒரு முறைக்கு மேல் மீண்டும் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எஸ்.பி உமா எச்சரித்தார்.

    First published:

    Tags: Chennai, Crime News