Home /News /chennai /

ஒடிசாவிலிருந்து ரயிலில் கஞ்சா கடத்தி வந்து மெரினா பீச்சில் விற்பனை- 4 பேர் கைது

ஒடிசாவிலிருந்து ரயிலில் கஞ்சா கடத்தி வந்து மெரினா பீச்சில் விற்பனை- 4 பேர் கைது

கைது செய்யப்பட்டவர்கள்

கைது செய்யப்பட்டவர்கள்

ஒடிசாவிலிருந்து கஞ்சா கடத்தி சென்னையில் விற்பனை செய்த 4 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தில் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்கும் விதமாக கடலோர காவல் படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை, தமிழக காவல்துறை, உளவுப்பிரிவு, கியூ பிரிவு உள்ளிட்டோர் இணைந்து நடத்தும் சாகர் கவாச் ஒத்திகை நேற்று தொடங்கியது.

சாகர் கவாச் ஒத்திகை பணியின் போது, திருவல்லிக்கேணி போலீசார் நேற்று காலை அண்ணா சாலை ஜிம்கானா கிளப் அருகே வாகன சோதனையில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த போது சந்தேகமான முறையில் வந்த ஆட்டோவை பிடித்து சோதனை செய்தனர். அதில் 10 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து ஆட்டோவில் கஞ்சா கடத்தி வந்த 4 நபர்களை போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர்கள், ஒடிசா மாநிலம் சோரோ தாலுக்கா ராமகிருஷ்ண சாகு(29), ஒடிசா மாநிலம் கஜபதி மாவட்டத்தைச் சேர்ந்த சங்கா மண்டல்(20), ஜக் மோகன் மண்டல்(28), அர்ஜூன் மண்டல்(20) என தெரிய வந்தது. இவர்கள் ஒடிசாவில் இருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தி சென்னை வருவதும். சென்னை சென்ட்ரல் ரயில்  நிலையம் வரும் வழியில் பெரம்பூர் பகுதியில் ரயில் மெதுவாக செல்லும் போது இறங்கி வந்து அங்கிருந்து ஆட்டோவின் மூலம் கஞ்சா கடத்தி செல்வதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிவகங்கையில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக அ.தி.மு.கவினர் போராட்டம்

இவர்களில் ராமகிருஷ்ண சாகு என்பவர் மெரினா பீச்சில் சுண்டல் விற்று வருவதும், சுண்டல் விற்கும் போது மெரினா பீச்சிற்கு வருபவர்களிடம் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்தது. இதே போல கடந்த சில மாதங்களாக ராமகிருஷ்ணன் சாகு ஒடிசாவிலிருந்து கஞ்சா கடத்தி வந்து அதனை மெரினா பீச்சில் விற்று வருவதும் தெரியவந்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட நபர்களை திருவல்லிக்கேணி போலீசார் சிறையில் அடைத்தனர்.
Published by:Karthick S
First published:

Tags: Police

அடுத்த செய்தி