ஹோம் /நியூஸ் /சென்னை /

சென்னை: ஆன்லைனில் மாஞ்சா நூல் விற்பனை செய்த பொறியியல் பட்டதாரி!

சென்னை: ஆன்லைனில் மாஞ்சா நூல் விற்பனை செய்த பொறியியல் பட்டதாரி!

மாதிரி படம்

மாதிரி படம்

போலிஸார் மேற்கொண்ட சோதனையில் 1500 காத்தாடி, 600 லொட்டாய் எனப்படும் நூல் உருளை, மாஞ்சா நூல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  சென்னையில் ஆன்லைன் மூலம் காற்றாடி மற்றும் மாஞ்சா நூல் விற்பனை செய்த பொறியியல் பட்டதாரியை போலீசார் தேடி வருகின்றனர்.

  மேற்கு அண்ணா நகர் முத்துமாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன்(30) என்ற பட்டதாரி இளைஞர் ஆன்லைனில் காத்தாடி, மாஞ்சா கயிறு, லொட்டாய் போன்ற பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

  இதையும் படிக்க : காதலனுக்கு ’ஆசிட் ஜூஸ்’ கொடுத்து கொன்ற விவகாரம் : கொலை செய்த இளம்பெண் தற்கொலை முயற்சி!

  இதையடுத்து வியாசர்பாடி தனிப்படை போலீசார் அவரது வீட்டுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். போலிஸார் மேற்கொண்ட சோதனையில் 1500 காத்தாடி, 600 லொட்டாய் எனப்படும் நூல் உருளை, மாஞ்சா நூல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

  இதையடுத்து பார்த்திபன் போலீஸாரிடமிருந்து தலைமறைவாகிவிட்டார். தலைமறைவான பார்திபனை போலீசார் தேடி வருகின்றனர். சென்னையில் காத்தாடி, மாஞ்சா பறக்கவிடுவதும், விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Raj Kumar
  First published:

  Tags: Beach, Crime News, Online crime, Online Sale