ஹோம் /நியூஸ் /சென்னை /

சிங்கம் மாலை சூடிப் பார்த்ததுண்டா.? இப்போது பாருங்கள் - தேவருக்கு புகழஞ்சலி செலுத்திய வைரமுத்து

சிங்கம் மாலை சூடிப் பார்த்ததுண்டா.? இப்போது பாருங்கள் - தேவருக்கு புகழஞ்சலி செலுத்திய வைரமுத்து

வைரமுத்து

வைரமுத்து

மதுரை விமான நிலையத்திற்கு தேவரின் பெயரை விட ஒரு பொருத்தமான பெயர் இருக்குமா என தெரியாது - வைரமுத்து

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவரின் பெயரை வைத்தால், அனைத்து மக்களும் வரவேற்பார்கள் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

  பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115 - வது ஜெயந்தி விழா மற்றும் 60-வது குருபூஜை விழா, ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் நடக்கிறது. இந்நிலையில் சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு கவிஞர் வைரமுத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

  இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியவர், “பசும்பொன் என்ற சொல்லுக்கே தேவர் என்ற பொருள் நிறைந்து வருகிறது.

  தேவரை ஜாதியத்திற்குள் அடக்க கூடாது. அவரை தேசிய பெரும் தலைவராக கொண்டாட வேண்டும். தேவரின் தியாகம் வேறு எவருக்கும் உண்டோ என்ற கேள்வி உள்ளது.

  Also Read:  தேவர் ஜெயந்தி.. பசும்பொன்னில் அமைச்சர்கள் மரியாதை..! பலத்த போலீஸ் பாதுகாப்பு!

  மதுரை விமான நிலையத்திற்கு தேவரின் பெயரை விட ஒரு பொருத்தமான பெயர் இருக்குமா என தெரியாது. மத்திய அரசு மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயரை வைத்தால் தேவர் சமுதாய மட்டுமல்ல ஒட்டுமொத்த மக்களும் வரவேற்கும்” என்றார்.

  தேவருக்கு மரியாதை செலுத்திய படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ள வைரமுத்து,

  “ இந்த மண்ணின்

  ஆதி அதிகாரக் குடிகளைக்

  கைரேகைச் சட்டத்தின்

  கைவிலங்கொடித்து மீட்டுக்கொடுத்த

  தேவர் திருமகன் மீது

  முரட்டு நேசம் கொண்டிருக்கிறோம்

  சாதிய அடையாளம் தாண்டி

  அவர் தேசிய அடையாளம் கொண்டவர் என்று

  எட்டுத்திசையும் கொட்டடிப்போம்

  சிங்கம்

  மாலைசூடிப் பார்த்ததுண்டா?

  இப்போது பாருங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Devar Jayanthi, Muthuramalinga Thevar, Tamil News, Vairamuthu