Home /News /chennai /

கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தமிழக அரசு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்- மருத்துவர் ராமதாஸ் ட்வீட்..

கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தமிழக அரசு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்- மருத்துவர் ராமதாஸ் ட்வீட்..

டாக்டர் ராமதாஸ்

டாக்டர் ராமதாஸ்

DR Ramadoss | கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தமிழக அரசு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ட்வீட்..

    சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கைக்கு தமிழக அரசு விரைந்து ஒப்புதல் வழங்கவேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவரது ட்விட்டர் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,  சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை கடந்த 10 மாதங்களுக்கு முன்பே தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதற்கு இன்னும் அரசு ஒப்புதல் அளிக்கவில்லை என தகவல் பெறும் உரிமை சட்டம் மூலம் தெரிய வந்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

    விரிவான திட்ட அறிக்கை அரசின் ஆய்வில் இருப்பதாக கடந்த ஜனவரி மாதம் 6-ஆம் தேதி சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஒப்புக்கொண்டார். அதன்பின் 6 மாதங்களாகும் நிலையில், இன்னும் மெட்ரோ ரயில் விரிவாக்க திட்ட அறிக்கைக்கு அரசு ஒப்புதல் அளிக்காததை நியாயப்படுத்த முடியாது என்றும் விமர்சித்துள்ளார்.

    மேலும் படிக்க: ஆன்லைன் மூலம் அதிமுக பொதுக்குழு? கொரோனா பரவல் காரணமாக மாற்று யோசனை

    கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு விட்டது. சென்னையையும், புதிய பேருந்து நிலையத்தையும் இணைக்க இப்போதுள்ள புறநகர் ரயில், நகரப் பேருந்து சேவைகள் போதுமானவையல்ல. அதனால் பயணிகள் பெரும் இன்னலுக்கு ஆளாவார்கள் என்று கூறியுள்ள அவர்,  தமிழக அரசு ஒப்புதல் அளித்தால் தான் மத்திய அரசின் ஒப்புதலையும் பெற்று நிதியை பெற முடியும்.



    எனவே, தமிழக அரசு இனியும் தாமதிக்காமல் கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் தொடர்பான விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்; நடப்பாண்டிற்குள் பணிகளைத் தொடங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Dr Ramadoss, PMK, Tamil Nadu

    அடுத்த செய்தி