Home /News /chennai /

சட்டவிரோத கல்குவாரி புகார் கொடுத்த சமூக ஆர்வலர் படுகொலை - நடவடிக்கை எடுக்க அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

சட்டவிரோத கல்குவாரி புகார் கொடுத்த சமூக ஆர்வலர் படுகொலை - நடவடிக்கை எடுக்க அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

அன்புமணி இராமதாஸ்

அன்புமணி இராமதாஸ்

சமூக ஆர்வலர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என்று பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் எச்சரித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
    சட்டவிரோத கல்குவாரிக்கு எதிராக  புகார் கொடுத்தவர் படுகொலை செய்யப்பட்டது குறித்தும் அதன் பின்னணி குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

    கரூரில் சட்டவிரோத கல்குவாரி தொடர்பாக புகார் கொடுத்த ஜெகநாதன் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில், “ கரூர் மாவட்டம் கரூர் குப்பம் கிராமத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த கல்குவாரி குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்த ஜெகநாதன் என்ற சமூக ஆர்வலர் கொடூரமான முறையில் சரக்குந்து ஏற்றி படுகொலை செய்யப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

    மேலும்,” இயற்கை வளத்தை பாதுகாப்பதற்காக போராடிய  ஒருவரை  கொல்லத் துணிகிறார்கள் என்றால், அவர்களுக்கு வலிமையான பின்னணி இருப்பதாகவே  தோன்றுகிறது. அதுகுறித்து விசாரணை நடத்துவதுடன்,  ஜெகநாதனின் படுகொலைக்கு காரணமான அனைவரையும் கைது செய்ய வேண்டும்” என்றும் அவர் பதிவிட்டிருந்தார்.




    மேலும் ”கொல்லப்பட்ட சமூக ஆர்வலர் ஜெகநாதனின் குடும்பத்திற்கு பா.ம.க. சார்பில் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அத்துடன் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Anbumani ramadoss, Chennai, Murder case, PMK, Twitter

    அடுத்த செய்தி