கூகுள் நிறுவன சிஇஓவாக இருக்கும் சுந்தர் பிச்சை நேற்று தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தில் இருக்கும் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமாக இருக்கும் ஆல்பாபெட் நிறுவனத்திற்கு சிஇஓவாக இருக்கும் சுந்தர் பிச்சை, தமிழகத்தில் பிறந்தவர். இவர் பள்ளி படிப்புகளை தமிழகத்தில் முடித்து கரக்பூர் ஐஐடியிலும், அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்திலும் மேற்படிப்பை முடித்தார்.
இவர் நேற்று (டிசம்பர் 26) உலக புகழ்பெற்ற சுற்றுலாதளமான மாமல்லபுரத்தில் குடும்பத்தோடு வந்திருந்தார். பல்லவர் கால கோவில் மற்றும் சிற்பங்களை குடும்பத்துடன் கண்டு ரசித்த இவரின் படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Google, Sundar pichai