ஹோம் /நியூஸ் /சென்னை /

சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியின்போது பணியிலிருந்த புகைப்படக் கலைஞர் உயிரிழப்பு..! நிவாரணம் அறிவித்த தமிழக முதல்வர்!

சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியின்போது பணியிலிருந்த புகைப்படக் கலைஞர் உயிரிழப்பு..! நிவாரணம் அறிவித்த தமிழக முதல்வர்!

மூத்த புகைப்பட கலைஞர் கே.வி.சீனிவாசன்

மூத்த புகைப்பட கலைஞர் கே.வி.சீனிவாசன்

மறைந்த பத்திரிகையாளர் கே.வி.சீனிவாசன் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்படும் நிகழ்ச்சியை புகைப்படம் எடுத்து பதிவிடுவதற்கான பணியில் இருந்த தனியார் நாளிதழின் புகைப்படக் கலைஞர் கே.வி.சீனிவாசன் என்பவர் நெஞ்சுவலி காரணமாக மயங்கி விழுந்தார். ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார். 

இந்நிலையில்  புகைப்பட கலைஞர் கே.வி.சீனிவாசன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மறைந்த புகைப்படக் கலைஞர் கே.வி.சீனிவாசன் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள  இரங்கலில், “பத்திரிகையாளர் கே.வி.சீனிவாசன் மாரடைப்பால் இறந்தார் என்பதை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்” என முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல புகைப்படம் எடுக்க சென்று உயிரிழந்த மூத்த புகைப்பட கலைஞர் கே. வி .சீனிவாசன் மறைவுக்கு செய்தித்துறையினரும், அரசியல்கட்சியினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

First published:

Tags: Chennai