Home /News /chennai /

சென்னை புளியந்தோப்பு பகுதியில் 2 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு - பிரபல ரவுடிக்கு போலீசார் வலை வீச்சு

சென்னை புளியந்தோப்பு பகுதியில் 2 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு - பிரபல ரவுடிக்கு போலீசார் வலை வீச்சு

பெட்ரோல் குண்டு வீச்சு

பெட்ரோல் குண்டு வீச்சு

Chennai : சென்னை புளியந்தோப்பு பகுதியில் இரவு நேரத்தில் இரண்டு இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், பிரபல ரவுடியை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

    சென்னை புளியந்தோப்பு வாசுகி நகர் பகுதியில் இரவு 10 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் பீர் பாட்டிலில் பெட்ரோல் ஊற்றி நெருப்பு வைத்து எரித்துவிட்டு அதனை  சீனிவாசன் (வயது 80) என்பவரது வீட்டு வாசலில் தூக்கி எறிந்தார். அது பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. பின்னர், லேசாக அங்கங்கே தீப்பற்றி எரிந்தது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர்.
    இதுகுறித்து  புளியந்தோப்பு காவல் நிலையத்திற்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்துக்கு உட்பட்ட புளியந்தோப்பு காந்திநகர் 6வது தெரு பகுதியில் வசித்து வரும் விமல் என்கின்ற சிங்கம் விமல் (வயது 30) என்பவரது வீட்டிலும் அதே நபர் பெட்ரோல் பீர் பாட்டிலால் செய்யப்பட்ட பெட்ரோல் குண்டை வீசி எறிந்தார். அதுவீட்டு வாசலில் உள்ள மேட்டில் விழுந்து வெடிக்காமல் லேசாக தீ பற்றியது. அதனை  அக்கம பக்கத்தினர் அணைத்துவிட்டனர்.

    இதுகுறித்து அப்பகுதியினர் பேசின் பிரிட்ஜ் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டார். பின்னர், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்த போது இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதுகுறித்து புளியந்தோப்பு சரக போலீசார் விசாரணை செய்ததில், திரு.வி.க நகர் ஒத்தவடை தெரு பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடியான மணி என்கின்ற குள்ளமணி (வயது 28) கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். குள்ளமணியின் மாமா அப்பு என்கின்ற தினேஷ் இவர் கடந்த 2017ஆம் ஆண்டு ஓட்டேரியில் வைத்து கதிரவன் என்ற கும்பலால் கொலை செய்யப்பட்டார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதற்கு பழி வாங்குவதற்காக குள்ளமணி தனது நண்பரான பேசின் பிரிட்ஜ் பகுதியில் வசிக்கும் விமல் என்பவரை அழைக்க வந்துள்ளார். அதற்கு விமல், நான் பழையபடி எங்கும் வருவதில்லை எனக்கூறி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த குள்ளமணி அவரது வீட்டில் பெட்ரோல் குண்டை போட்டது தெரியவந்தது.

    Must Read : 16 வயது மாணவியை கர்ப்பமாக்கிய 63 வயது முதியவர் - அபார்ஷன் செய்ய வத்தபோது அம்பலமான அதிர்ச்சி தகவல்

    மேலும் இந்ந சம்பவத்திற்கு முன்பு வாசுகி நகரில் பெட்ரோல் பாம் வீசியதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை செய்ததில், அந்தப்பகுதியில் மாரி என்கின்ற லோடாங்கு மாரி என்பவரை மிரட்டுவதற்காக  பெட்ரோல் நிரப்பிய பீர் பாட்டிலை அவரது தந்தை சீனிவாசன் அமர்ந்திருந்த இடம் பார்த்து வீசிவிட்டு அவரிடம் எச்சரித்து வந்ததும் தெரிய வந்தது.

    மேலும், மணியுடன் வந்த மற்றொரு நபர் புழல் மணிகண்டபுரம் பகுதியைச் சேர்ந்த சூர்யா என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து புளியந்தோப்பு மற்றும் பேசின் பிரிட்ஜ் போலீசார் குள்ளமணி மற்றும் அவரது நண்பர் சூர்யாவை தேடி வருகின்றனர்.

    செய்தியாளர் - அசோக்குமார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Bomb, Chennai, Petrol

    அடுத்த செய்தி