Home /News /chennai /

பாலியல் தொழில் போட்டி காரணமாக ஹோட்டல் மீது பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு.. கைது செய்யப்பட்ட குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம்

பாலியல் தொழில் போட்டி காரணமாக ஹோட்டல் மீது பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு.. கைது செய்யப்பட்ட குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம்

ஹோட்டல் மீது வெடிகுண்டு வீச்சு

ஹோட்டல் மீது வெடிகுண்டு வீச்சு

Chennai | கேகே நகர் பகுதியில் விடுதி ஒன்றில் தலைமறைவாக இருந்த குற்றவாளி வினோத் என்பவரை கைது செய்து காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
சென்னை வடபழனி ஏவிஎம் ஸ்டுடியோ எதிரே பிரபல ஹோட்டலான எம்.ஆர்.எம் ரெசிஸ்டென்சி என்ற விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் கடந்த 26 ஆம் தேதி இரவு 9 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் இரண்டு பெட்ரோல் வெடிகுண்டுகளை விடுதியின் வரவேற்பறையில் தூக்கி வீசி விட்டு சென்றனர்.

இந்த பெட்ரோல் வெடிகுண்டு வீச்சில் வரவேற்பறை கண்ணாடி நொறுங்கி விழுந்தது. மேலும், அங்கு இருந்த மரப் பொருட்கள் தீப்பற்றி எரிய ஆரம்பித்ன. உடனடியாக விடுதியின் ஊழியர்கள் தீயை அணைத்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த விருகம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், சிசிடிவி காட்சிகளில் இரண்டு மர்ம நபர் பெட்ரோல் வெடிகுண்டு வீசும் காட்சியும் பதிவாகி இருந்தது. அந்தநபர்கள் பெட்ரோல் வெடிகுண்டு வீசுவதற்கு முன்னதாக ஒரு ஹார்டுவேர்ஸ் கடையில் சில பொருட்கள் வாங்குவதும் சிசிடிவி காட்சியில் பதிவாகியது.

இதனையடுத்து குற்றவாளிகளை அடையாளம் கண்ட போலீசார் இருவரையும் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் கேகே நகர் பகுதியில் விடுதி ஒன்றில் தலைமறைவாக இருந்த குற்றவாளி ஒருவரை கைது செய்து காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் அந்த நபர் மதுரவாயல் லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த வினோத்(37) என்பது தெரியவந்தது. இவர் மீது மதுரவாயல் மற்றும் கூடுவாஞ்சேரி காவல் நிலையங்களில் மூன்று கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

மேலும், வினோத் விபச்சார புரோக்கர் என்பதும் விபச்சார தொழில் போட்டி காரணமாக ஒரு கொலையும் செய்துள்ளார் என்பதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. குறிப்பாக விபச்சார புரோக்கரான வினோத் வடபழனியில் உள்ள எம்.ஆர்.எம் ரெசிஸ்டென்சி விடுதியில் கடந்த நான்கு ஆண்டுகளாக பாலியல் தொழிலுக்காக பெண்களை அனுப்பி வந்துள்ளார்.

ஹோட்டல் நிர்வாகத்தினர் உடன் இணைந்து ஹோட்டலுக்கு வரக்கூடிய பணக்காரர்களுக்கு பாலியல் தொழிலுக்காக பெண்களை அனுப்பி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளாக எம்.ஆர்.எம் ரெசிஸ்டென்சியில் பெண்களை அனுப்பி பாலியல் தொழில் செய்து வந்ததால் புரோக்கர் தொழிலில் வினோத்துக்கு அப்பகுதியில் செல்வாக்கு அதிகரித்துள்ளது.

இதனால் தனியாக பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்ய ஆரம்பித்துள்ளார். இந்த நிலையில் எம்.ஆர்.எம் ரெசிடென்சியில் பாலியல் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் எம் ஆர் எம் ரெசிடென்சி நிர்வாகத்தினர் மீண்டும் தங்களோடு இணைந்து தொழில் செய்ய வேண்டுமென கூறியுள்ளனர். அதற்கு மறுப்பு தெரிவித்ததால் தன்னை மிரட்டியதாகவும் அதனால் பழிவாங்க தனது நண்பர் கலை என்பவரோடு சேர்ந்து பெட்ரோல் வெடிகுண்டு வீசியதாகவும் கைது செய்யப்பட்டுள்ள வினோத் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Also see... கையோடு பெயர்ந்து வரும் தார்ச்சாலை..திருச்சி மக்கள் அதிர்ச்சி.

இதனையடுத்து சட்டவிரோதமாக பாலியல் தொழில் நடத்தி வந்ததாக குற்றவாளி அளித்த வாக்குமூலம் தொடர்பாக எம்.ஆர்.எம் விடுதி நிர்வாகத்தினரிடம் விசாரணை நடத்த விருகம்பாக்கம் போலீசார் திட்டமிட்டுள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள வினோத்தின் நண்பர் கலையை தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட வினோத்திடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Business, Chennai, Crime News, Sexually harassed women

அடுத்த செய்தி