ஹோம் /நியூஸ் /சென்னை /

காலணியில் காந்தி படம்.. உள்ளாடையில் சுவாமி படங்கள் அச்சிட்டு விற்கும் விவகாரம் : அரசுக்கு கெடு விதித்த உயர்நீதிமன்றம்!

காலணியில் காந்தி படம்.. உள்ளாடையில் சுவாமி படங்கள் அச்சிட்டு விற்கும் விவகாரம் : அரசுக்கு கெடு விதித்த உயர்நீதிமன்றம்!

மாதிரி படம்

மாதிரி படம்

இதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவில், இந்திய நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடும் வகையில் உள்ளதாகவும், மக்களின் மத நம்பிக்கைகளை புண்படுத்தும் வகையில் உள்நோக்கத்துடன் செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

காலணிகளில் மகாத்மா காந்தி படமும், உள்ளாடைகளில் கடவுள்கள் படங்களையும் அச்சிட்டு விற்பனை செய்யும் அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி மத்திய - மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள், காலணிகள் மற்றும்  உள்ளாடைகளில் மகாத்மா காந்தி மற்றும் கடவுள்கள் புகைப்படங்களை அச்சிட்டு விற்பனை செய்து வருவதாகவும், அந்த நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரி மதுரையைச் சேர்ந்த முத்துகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

அதில், சர்வதேச ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் இந்த செயல்பாடு இந்திய நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடும் வகையில் உள்ளதாகவும், மக்களின் மத நம்பிக்கைகளை புண்படுத்தும் வகையில் உள்நோக்கத்துடன் செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டு மக்களிடையே விரோதத்தை தூண்டு வகையில் செயல்படும் இந்த நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி மத்திய - மாநில அரசுகளுக்கு மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : ₹ 16,000 கோடி டெபாசிட்.. விப்ரோவையே ஓரம் தள்ளிய திருப்பதி.!

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் கிருஷ்ணகுமார் அமர்வு, மகாத்மா காந்தி புகைப்படத்தை செருப்புகளில் அச்சிட்டுள்ளதாக மனுவில் கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டி,  நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.

Published by:Raj Kumar
First published:

Tags: Amazon, Chennai High court, Flipkart, Online shopping