Home /News /chennai /

போலீஸ் அதிகாரி எனக்கூறி பண மோசடி... போலியாக சைரன் காருடன் உலாவந்த மோசடி பேர்வழி - சென்னையில் கைது

போலீஸ் அதிகாரி எனக்கூறி பண மோசடி... போலியாக சைரன் காருடன் உலாவந்த மோசடி பேர்வழி - சென்னையில் கைது

மோசடி பேர்வழி கைது

மோசடி பேர்வழி கைது

Chennai : போலீசாருக்கு பெரும் சவாலாக விளங்கிய மதன்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  சென்னையில் சிறைதுறை போலீஸ் என கூறிக்கொண்டு பல பேரிடம் லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்த பலே ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.

  புழல் காவாங்கரை இந்திரா நகரை சேந்தவர் பிச்சுமணி. இவர் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஆவார். அவருடைய மகன் மதன்குமார்(வயது 32). இவர் தன்னை ஒரு காவல் அதிகாரியாகவும்  ரெட்ஹில்ஸ் சோசியல் மீடியா என்ற இணையதளம் மூலமாகவும்  பில்டிங் கண்ட்ஸ்ரக்ஷன் நடத்தி வருவதாகவும் குறைந்த விலையில் வீடு கட்டித் தருவதாகவும் விளம்பரங்கள் செய்து மிக பிரபலமாக சொகுசு காரில் உலா வந்து கொண்டிருந்தார்.

  கடந்த டிசம்பர் மாதம் சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்த ஷங்கர் என்பவரிடம் தானொரு கட்டிட பொறியாளர் எனக்கூறி சங்கருக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டித் தருவதாக கூறி 10 லட்ச ரூபாய் பணம் வாங்கி தலைமறைவானார்.  அதேபோன்று பல்லாவரத்தை சேர்ந்த வெற்றிச்செல்வன் என்பவரிடம் இதே பாணியில் மாநகராட்சியில் வேலை வாங்கி தருவதாக கூறி 7 லட்ச ரூபாய் பணம் வாங்கி வேலையும் வாங்கி தராமல் பணத்தையும் திருப்பி தராமல் அலைக்கழித்து வந்துள்ளார்.

  தொடர்ந்து தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரியும் அம்பத்தூர் அடுத்த சூரப்பட்டு சிவப்பிரகாசம் நகரை சேர்ந்த லட்சுமி பிரியா என்பவரிடம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முகநூல் மூலம் பழகி தான் ஒரு சிறைத்துறை அதிகாரி எனக் கூறிக்கொண்டு அன்பாக பழகி வந்த நிலையில், லட்சுமி பிரியா தனது கணவரிடம் இருந்து விவாகரத்து வாங்கி தரும்படி கூறியதில் அதற்கு  மதன்குமார் 13 லட்ச ரூபாய் வரை பெற்றதாக கூறப்படுகிறது.

  ஆனால் சொன்னபடி எந்த ஒரு வேலையும் செய்யாமல் அலைக்கழித்து வந்ததால் கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட லட்சுமிபிரிவை, தான் ஒரு காவல் அதிகாரி என்னை ஒன்றும் செய்ய முடியாது எனக் கூறி மிரட்டியதால் லட்சுமி பிரியா கொடுத்த புகாரின் பேரில் அம்பத்தூர் போலீசார் கைது செய்து சிறைக்கு சென்று திரும்பி மறுபடியும் தனது மோசடி தொழிலை ஆரம்பித்துள்ளார்.

  அதுமட்டுமன்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் காவல் அதிகாரியின் போர்வையில் சைரன் வைத்தது போல் செட்டப் செய்து தமிழகம் முழுவதும் உலா வந்துள்ளார். இவரிடம் இதுபோல் ஏமாந்த பலர்  காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் மதன்குமாரை புழல் காவல் நிலைய உதவி கமிஷனர் ஆதிமூலம் மற்றும் இன்ஸ்பெக்டர் ஷோபா ஆகியோர் தனிப்படை அமைத்து மதன்குமாரை தேடி வந்த நிலையில் அவரது வீட்டில்வைத்து மதன்குமாரை கைது செய்துள்ளனர். அதன்பின்னர், காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இவரிடமிருந்து போலி போலீஸ் அடையாள அட்டையை பறிமுதல் செய்து விசாரணையில் ஈடுபட்ட போலீசாரிடம், காவல் துறையில் முக்கிய அதிகாரிகள் என்னிடம் நெருங்கிய தொடர்பில் உள்ளனர் என்றும் தன்னை கைது செய்தால் அதன் விளைவுகள் வேறு மாதிரி இருக்கும் என மிரட்டியுள்ளார்.

  Must Read : 10th, 12th பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு... தெரிந்துகொள்வது எப்படி?

  போலீசாருக்கு பெரும் சவாலாக விளங்கிய மதன்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இவர் வேறு யார் யாரிடம் எல்லாம் மோசடி வேலைகளில் ஈடுபட்டு பணம் பறித்துள்ளார் என காவல் துறையில் விசாரணை செய்து வருகின்றனர்.

  செய்தியாளர் - பார்த்தசாரதி, சென்னை.
  Published by:Suresh V
  First published:

  Tags: Arrested, Chennai, Money Laundering, Police

  அடுத்த செய்தி