மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதையை நாளை மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
சென்னை மெரினா கடற்கரையில் தினசரி ஏராளமானோர் சென்று வருகின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அலையை ரசிக்க ஓடோடி வருகின்றனர்.
இந்த நிலையில், மாற்றுத்திறனாளிகள் கடல் அலையை கண்டுகளிக்க முடியவில்லை என பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். கடற்கரை மணலில் சக்கர நாற்காலியை இயக்க முடியாததால் அவர்களுக்கு இது எட்டாக்கனியாகவே இருந்தது.
இந்த தடையை உடைத்து, மாற்றுத்திறனாளிகளுக்கு மெரினா கடற்கரையில் சிறப்பு பாதை அமைத்து தரப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மாற்றுத்திறனாளிகள் கடல் அலையை ரசிக்க தற்காலிக பாதை அமைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அவர்களுக்கான நிரந்தர பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பாதையை நாளை மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
மாற்றுத்திறனாளிகளை கொண்டு செல்வதற்காக 5 சிறப்பு மூன்று சக்கர வாகனமும் 15 சாதாரண மூன்று சக்கர வாகனமும் மாநகராட்சி சார்பில் இந்த இடத்தில் உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Marina Beach, Special arrangements