ஹோம் /நியூஸ் /சென்னை /

தீபாவளிக்கு சொந்த ஊருக்கு படையெடுத்த மக்கள்... திணறும் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை...

தீபாவளிக்கு சொந்த ஊருக்கு படையெடுத்த மக்கள்... திணறும் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை...

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து நெரிசல்

Heavy Traffic | தீபாவளி பண்டிகையொட்டி சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் பொதுமக்களால் செங்கல்பட்டு மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து நெரிசலில் திணறியது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chengalpattu, India

  தீபாவளி பண்டிகையொட்டி சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் பொதுமக்களால் செங்கல்பட்டு மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து நெரிசலில் திணறியது.

  வரும் திங்களன்று  தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதையொட்டி மூன்று நாள் தொடர் விடுமுறை என்பதால் தென் மாவட்டங்களை சேர்ந்த மக்கள் தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்காக செல்வதால் இன்று மாலை முதல் சென்னை to திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

  மேலும், அலுவலகம், பள்ளி, கல்லூரிகள் முடிந்த பிறகு குடும்பத்துடன் செல்வோர்களின் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து சிங்கபெருமாள்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் இருமார்க்கத்திலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

  மேலும், சிங்கபெருமாள்கோவில், ஒரகடம் செல்லும் சாலையில் ரயில்வே கேட் உள்ளதால் ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் உள்ள  தொழிற்சாலைகளுக்கு மறைமலை நகர், மகேந்திரா வேர்ல்ட் சிட்டி ஆகிய பகுதிகளிலிருந்து அதிக அளவில் சரக்கு வாகனங்கள் மற்றும் ஊழியர்கள் பயணிக்கும் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் மாலை நேரத்தில் அதிகமாக செல்வதாலும், தீபாவளிக்கு அதிகமானோர் வாகனங்களில் செல்வதாலும், சிங்கபெருமாள்கோவில் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகும் நிலை உள்ளது.

  மேலும்,செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த காவல்துறையினர் தரப்பில் தற்காலிக பேருந்து நிறுத்தம், பேருந்துகள், அரசு வாகனங்கள் மட்டுமே செல்ல இரு தடங்கள், இருசக்கர வாகனங்கள் சுங்கச்சாவடி முன்பே தற்காலிக மாற்றுப்பாதை அமைக்கப்பட்டு இருசக்கர வாகனங்கள் அந்த வழியில் அனுமதிக்கப்படுவதால் சுங்கச்சாவடியில் தற்போது வாகன போக்குவரத்து நெரிசலின்றி சுங்கச்சாவடி கடப்பது எளிமையாக்கப்பட்டுள்ளது. (செய்தியாளர் : ராபர்ட் எபினேசர் - செங்கல்பட்டு)

  Published by:Karthi K
  First published:

  Tags: Chengalpattu, Chennai, Deepavali, Diwali, Traffic