ஹோம் /நியூஸ் /சென்னை /

சென்னையில் நாளை பாஸ்போர்ட் சேவை மையங்களில் சிறப்பு முகாம்..

சென்னையில் நாளை பாஸ்போர்ட் சேவை மையங்களில் சிறப்பு முகாம்..

Indian Passport

Indian Passport

passport Office | பாஸ்போர்ட் சேவை மையங்கள் வார விடுமுறை தினமான நாளை சனிக்கிழமையும் வழக்கம்போல் செயல்பட உள்ளன.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்கு காவல்துறை அனுமதி சான்றிதழ் (பி.சி.சி.) பெறுவதற்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனால் பொதுமக்களின் வசதிக்காக சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு உட்பட்ட சாலி கிராமம், அமைந்தகரை, தாம்பரம், புதுச்சேரி பாஸ்போர்ட் சேவை மையங்கள் நாளை (சனிக்கிழமை) சிறப்பு முகாம் செயல்படுகிறது.

  Also see...ஆவின் ஆரஞ்சு பால் பாக்கெட் விலை உயர்வு...

  சுமார் 1,400-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் இந்த 4 பாஸ்போர்ட் சேவை மையங்களிலும் நடைபெறும் சிறப்பு முகாமில் கையாளப்பட உள்ளது. இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் எஸ்.கோவேந்தன் தெரிவித்துள்ளார்.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Chennai, Passport