Home /News /chennai /

தாம்பரம் ரயில் நிலையத்தில் டிக்கெட் வாங்க பல மணி நேரமாக காத்திருக்கும் மக்கள்

தாம்பரம் ரயில் நிலையத்தில் டிக்கெட் வாங்க பல மணி நேரமாக காத்திருக்கும் மக்கள்

கோப்பு படம்

கோப்பு படம்

தாம்பரம் இரயில்வே நிலையத்தில் ஆறு டிக்கெட் கவுண்டர்கள் உள்ள நிலையில் மூன்று டிக்கெட் கவுண்டர்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    தாம்பரம் ரயில் நிலைய டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் வாங்குவதற்கு பல மணி நேரமாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரவித்துள்ளனர்.

    சென்னை எக்மோர், சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அடுத்தபடியாக புறநகர் பகுதியில் முக்கிய ரயில் நிலையமாக தாம்பரம் ரயில் நிலையம் திகழ்ந்து வருகிறது.. இந்த தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு மட்டும் இல்லாமல் தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் அரக்கோணம் , தாம்பரத்திலிருந்து கடற்கரை வரையில் செல்லும் ரயில்கள் தினந்தோறும் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் ரயிலில் பயணம் செய்வதற்காக டிக்கெட் வாங்குவதற்கு பலமணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. தாம்பரம் இரயில்வே நிலையத்தில் ஆறு டிக்கெட் கவுண்டர்கள் உள்ள நிலையில் மூன்று டிக்கெட் கவுண்டர்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றது.

    Also Read : சொந்த ஊரிலிருந்து திரும்பும் பயணிகள் கவனத்திற்கு... அரசு போக்குவரத்து துறை முக்கிய அறிவிப்பு

    மற்ற மூன்று டிக்கெட் கவுன்டர்கள் மூடபட்டு உள்ளதால் பல மணி நேரம் டிக்கெட் வாங்குவதற்கு பயணிகள் காத்துருக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே ஆறு கவுண்டர்களையும் திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Published by:Raj Kumar
    First published:

    Tags: Railway Station, Tambaram

    அடுத்த செய்தி