முகப்பு /செய்தி /சென்னை / ஈரோடு இடைத்தேர்தல் தோல்வி.. இபிஎஸ் ஆணவமே முழு காரணம் - பண்ருட்டி ராமச்சந்திரன் விமர்சனம்

ஈரோடு இடைத்தேர்தல் தோல்வி.. இபிஎஸ் ஆணவமே முழு காரணம் - பண்ருட்டி ராமச்சந்திரன் விமர்சனம்

இபிஎஸ், பண்ருட்டி ராமசந்திரன்

இபிஎஸ், பண்ருட்டி ராமசந்திரன்

தேர்தல் முடிவுகளைப் பார்த்துக் கொண்டே வந்தபோது ஒருகட்டத்தில் அதிமுக டெபாசிட் இழந்துவிடுமோ என தான் சந்தேகித்தேன்- பண்ருட்டி ராமசந்திரன்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

எடப்பாடி பழனிசாமியையும் அவரது அணியினரையும் தூக்கி எறிந்தால்தான் அதிமுகவைக் காப்பாற்ற முடியும் என முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் விமர்சித்துள்ளார்.

பரபரப்பாக நடைபெற்ற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், 1,10,039 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார்.

ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவுகள் தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது பேரதிர்ச்சி அளிக்கிறது. தேர்தல் முடிவுகளைப் பார்த்துக் கொண்டே வந்தபோது ஒருகட்டத்தில் அதிமுக டெபாசிட் இழந்துவிடுமோ என தான் சந்தேகித்தேன்.

எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்திய தேர்தல்களில் எல்லாம் அதிமுக தோல்வியையே சந்தித்துள்ளது. எடப்பாடி பழனிசாமியால் அதிமுக ஆட்சியையே இழந்தது. இபிஎஸ் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி நடந்துக்கொள்ளவில்லை. ஓபிஎஸ் மற்றும் முன்னணி தலைவர்களை அலட்சியப்படுத்தினார்.

இடைத்தேர்தலுக்கு முழு ஒத்துழைப்பு தருகிறோம் என கூறியும் எங்களை அழைக்கவில்லை. இரட்டை இலை சின்னம் மூலம் டெபாசிட் பெற்றது ஆறுதல் அளிக்கிறது. தோல்விக்கு எடப்பாடி பழனிசாமியின் ஆணவ போக்கே காரணம்." என தெரிவித்தார்.

First published:

Tags: ADMK, EPS, Erode Bypoll, Erode East Constituency, OPS