ஹோம் /நியூஸ் /சென்னை /

கடைசிநேரத்தில் மணமகள் மாயம்.. நின்றுபோன திருமணம்.. அதிர்ச்சியில் குடும்பத்தினர்

கடைசிநேரத்தில் மணமகள் மாயம்.. நின்றுபோன திருமணம்.. அதிர்ச்சியில் குடும்பத்தினர்

மாதிரி படம்

மாதிரி படம்

Bride escape | நேற்று திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பாகவே மண்டபத்தில் இருந்து மணப்பெண் திடீரென மாயமாகியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pallavaram, India

சென்னையை அடுத்த பல்லாவரம் துரைக்கண்ணு சாலை பகுதியை சேர்ந்த 25 வயதான இளம்பெண், மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கார் ஷோரூமில் வேலை செய்து வருகிறார். இவருக்கும், வியாசர்பாடியை சேர்ந்த வாலிபருக்கும் இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இன்று இவர்களின் திருமணம் நடைபெற இருந்த நிலையில், நேற்று மாலை இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டு பின்புறத்தில் நின்று செல்போனில் பேசி கொண்டிருந்த மணப்பெண் திடீரென மாயமாகியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மணப்பெண்ணை பல இடங்களில் தேடினார். ஆனால் நீண்ட நேரமாகியும் பெண் கிடைக்காததால் இது குறித்து அவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தினர்.

அதே பகுதியை சேர்ந்த இளைஞருடன்  மணப்பெண்ணுக்கு பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் இந்த திருமணம் பிடிக்காமல் அவருடன் சென்றாரா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணமகள் மாயமானதால் திருமணம் நின்றுபோனது. இதனால் இரு வீட்டாரும் சோகத்தில் மூழ்கினர்.

First published:

Tags: Chennai, Local News, Pallavaram