ஹோம் /நியூஸ் /சென்னை /

“யார் ரூட் பெருசு?” கற்கள், கட்டையால் அடித்து கொண்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்!

“யார் ரூட் பெருசு?” கற்கள், கட்டையால் அடித்து கொண்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்!

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்

பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த கல்லூரி மாணவர்களுக்கிடையே யார் ரூட்டு பெரியது? என பிரச்சனை எழுந்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

சென்னை கீழ்பாக்கத்தில் அமைந்துள்ள பச்சையப்பன் கல்லூரியில் இன்று பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் நடந்துள்ளது.

ஆட்டம், பாட்டம், நாடகம், இசை நிகழ்ச்சி என பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் இந்த பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் கல்லூரி மாணவர்கள் செனாய் நகரில் இருந்து பேருந்தில் தொங்கியபடி சாகசங்களில் ஈடுபட்டும் ஆட்டம் பாட்டத்தில் ஈடுபட்டும் பொது மக்களுக்கு தொந்தரவு செய்தவாறு கல்லூரிக்கு வந்துள்ளனர்.

மேலும் பல மாணவர்கள் சாலையில் ஊர்வலமாக ‘பச்சையப்பன் கல்லூரிக்கு ஜே’ என கோஷமிட்டவாறே கல்லூரிக்குள் வந்துள்ளனர். இதேபோல ஒவ்வொரு ரூட்டு தல கேங்கும் பேருந்து சாகசங்களிலும், ஊர்வலமாகவும் வந்து கல்லூரிக்குள் சென்றுள்ளனர். இதனை பார்த்த மற்ற மாணவர்கள் தங்களது ரூட் குறித்து கோஷமிட்டுள்ளனர்.

இதனால் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த கல்லூரி மாணவர்களுக்கிடையே யார் ரூட்டு பெரியது? என பிரச்சனை எழுந்துள்ளது. பிரச்சனை பின் வாக்குவாதமாக மாறி முற்றியுள்ளது. இதனால் கல்லூரி மாணவர்கள் தங்களுக்குள்ளாகவே கோஷ்டிகளாக பிரிந்து கீழே கிடந்த கற்கள் மற்றும் கட்டைகளை எடுத்து மற்ற கேங் மாணவர்களை தாக்கியுள்ளனர்.

இதனால் கல்லூரி வளாகமே கலவர பூமியாக மாறியது. உடனடியாக கல்லூரி நிர்வாகத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சுமார் 30க்கும் மேற்பட்ட கீழ்பாக்கம் போலீசார் வந்து வன்முறையில் ஈடுபட்ட மாணவர்களை விரட்டி அடித்தனர். போலீசாரை கண்டதும் மாணவர்கள் கலைந்து தப்பிச் சென்றனர். தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு கல்லூரி மாணவர்களை போலீசார் விரட்டி பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இந்த தாக்குதலில் காயமடைந்த ஆனந்த் என்ற கல்லூரி மாணவரை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு காரணமான மாணவர்கள் யார்? யார்? என கீழ்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

First published:

Tags: Crime News, Fight, Pachayappa's college, Route Thala, Students