Home /News /chennai /

BC-யா? SC-யா? என பார்த்தாலே தெரியும்.. ஆடியோ சர்ச்சையில் சிக்கிய பச்சையப்பன் கல்லூரி பேராசிரியை சஸ்பெண்ட்

BC-யா? SC-யா? என பார்த்தாலே தெரியும்.. ஆடியோ சர்ச்சையில் சிக்கிய பச்சையப்பன் கல்லூரி பேராசிரியை சஸ்பெண்ட்

பச்சையப்பன் பேராசிரியை ஆடியோ வெளியாகி சர்ச்சை

பச்சையப்பன் பேராசிரியை ஆடியோ வெளியாகி சர்ச்சை

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் துறை தலைவராக பணியாற்றிய பேராசிரியை அனுராதா சாதீய ரீதியில் பேசிய ஆடியோ வெளியாகி சர்ச்சையான நிலையில் தற்போது அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் துறை தலைவராக பணியாற்றி வருபவர் அனுராதா. இவர் தனது துறை மாணவர்களிடம் சாதிய பாகுபாடுகளை ஏற்படுத்தும் விதமாக பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.

    அந்த ஆடியோவில், முகத்தைப் பார்த்தாலே BC யா? MBC யா? அல்லது SC யா? என தெரிந்துவிடும். நீ என்ன கம்யூனிட்டி என்பது கூட எனக்கு தெரியாது என்று கூறிவிட்டு நீ என்ன கம்யூனிட்டி என்று கேட்டு தமிழ் துறை மாணவர்களின் குறிப்பிட்ட சிலரின் பெயரை உச்சரித்து கம்யூனிட்டி குறித்தும் கேள்வி எழுப்பி இருந்தார்.மாணவர்கள் இடத்தில் சாதிய பாகுபாடுகளை உண்டாக்கும் நோக்கில் தமிழ் துறை தலைவர் அனுராதா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதற்கிடையே, கடந்த ஆண்டும் சாதிய பாகுபாடு ஏற்படுத்தும் நோக்கில் இதே தமிழ் துறை தலைவர் அனுராதா ஈடுபட்டதாகவும், அவருக்கு காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பா கல்லூரிக்கு பணிமாற்று செய்ததும் தற்போது தெரிய வந்துள்ளது. மேலும், நீதிமன்றத்தில் தடைபெற்று சென்னை பச்சையப்பன் கல்லூரியிலேயே பணியாற்றி வந்தார் என்ற தகவல்களும் வெளியாகி இருந்தது.

    Also Read : அதிமுக அலுவலகம் சூறையாடல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் - தமிழக அரசு

    மேலும், கடந்த 2016ம் ஆண்டு அப்போதைய பச்சையப்பன் கல்லூரி முதல்வர் இவருடைய செயல்பாடுகளை குறிப்பிட்டு ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பியதும் தற்போது தெரியவந்துள்ளது, உடன் பணியாற்றும் பேராசிரியர்கள் சாதிய கண்ணோட்டத்துடன் இவர் நடத்திய தகவல்களும் வெளியானது.

    இந்த விவகாரம் குறித்து பச்சையப்பன் கல்லூரி முதல்வர் கஸ்தூரி " ஒழுங்கு நடவடிக்கை குழு பேராசிரியை அனுராதாவிடம் விசாரணை நடத்தி அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் பச்சையப்பன் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் பேராசிரியை அனுராதாவை பணியிடை நீக்கம் செய்துள்ளார். பச்சையப்பன் அறக்கட்டளை பேராட்சியர் நீதியரசர் ராஜூ அனுமதியுடன் கல்லூரி செயலாளர் துரைக்கண்ணு உத்தரவிட்டுள்ளார்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Chennai

    அடுத்த செய்தி