ஹோம் /நியூஸ் /Chennai /

இரண்டு ரூபாய்க்கு ‘ஜில்ஜில்’ ஐஸ்கிரீம்… நம்ம சென்னையில் இப்படி ஒரு கடை!

இரண்டு ரூபாய்க்கு ‘ஜில்ஜில்’ ஐஸ்கிரீம்… நம்ம சென்னையில் இப்படி ஒரு கடை!

குறைந்த விலையில் ஐஸ்கிரீம் தருவது அறிமுக சலுகையாக இருக்க வேண்டும் என்று தான் நினைத்ததாகவும், ஆனால் மக்களின் ஆதரவால் விலையை உயர்த்த மனமில்லாமல் இருப்பதாகவும் வினோத் தெரிவித்துள்ளார்.

குறைந்த விலையில் ஐஸ்கிரீம் தருவது அறிமுக சலுகையாக இருக்க வேண்டும் என்று தான் நினைத்ததாகவும், ஆனால் மக்களின் ஆதரவால் விலையை உயர்த்த மனமில்லாமல் இருப்பதாகவும் வினோத் தெரிவித்துள்ளார்.

குறைந்த விலையில் ஐஸ்கிரீம் தருவது அறிமுக சலுகையாக இருக்க வேண்டும் என்று தான் நினைத்ததாகவும், ஆனால் மக்களின் ஆதரவால் விலையை உயர்த்த மனமில்லாமல் இருப்பதாகவும் வினோத் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

இந்த கொளுத்தும் வெயிலில், ஒரு மனிதனின் சிறந்த நண்பனாக இருப்பது ஐஸ்கிரீம் என்றால் அது மிகையாகாது. ஐஸ்கிரீம் எப்போதும் மக்களின் மனநிலையை மாற்றும், ஏனெனில் அது சுவையின் திருப்தியையும் வெப்பத்திலிருந்து நிவாரணத்தையும் அளிக்கிறது. அந்த வகையில், சென்னை மேற்கு மாம்பலத்தில் உங்களுக்கு பிடித்த எந்த ஐஸ்கிரீம்களையும் 2 ரூபாய் அல்லது அதற்கும் கீழ் சாப்பிடலாம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

மேற்கு மாம்பலத்தில் உள்ள வினூஸ் இக்லூவில், 2 ரூபாய்க்கும் குறைவான விலையில் இனிப்புப் பொருட்களைப் பெறலாம். இந்த இடம் சென்னையில் உள்ள அனைத்து ஐஸ்கிரீம் பிரியர்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாகும். பின்னணியில், இன்னிசை ஒலிப்பதாலும், ஏராளமான மக்கள் கடையில் குவிவதாலும் அப்பகுதியில் மிகவும் விரும்பப்படும் கடைகளில் இதுவும் ஒன்றாக உள்ளது.

இந்த கடையில் வெண்ணிலா, ஸ்ட்ராபெர்ரி, மாம்பழம், பிஸ்தா உள்ளிட்ட அனைத்து வகையான சுவைகளிலும் ஐஸ்கிரீம் கிடைக்கிறது. ஐஸ்கிரீமை அதிக அளவில் வாங்க 8 ரூபாய் செலுத்தினால் போதும். அதுமட்டுமின்றி, இந்த கடையில் ஐஸ்கிரீமுடன் ரசகுல்லா மற்றும் பால்கோவாவும் வழங்கப்படுகிறது.

வரலாறு:

1995ஆம் ஆண்டு வினோத் என்பவரின் தந்தை விஜயன்தான் இந்த கடையைத் தொடங்கினார். ‘நான் அப்போது ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். நாங்கள் அடிக்கடி ஐஸ்கிரீம் கடைகளுக்கு செல்வது வழக்கம். எனது தந்தை அதில் பிஸினஸ் வாய்ப்பு இருப்பதாக உணர்ந்து, சொந்தமாக ஒரு விற்பனை நிலையத்தை நிறுவினார். ஆரம்பத்தில் ஒரு கூம்புக்கு ஒரு ரூபாய் மட்டுமே வசூலித்தார். பின்னர் சில ஆண்டுகளில் அது இரண்டு ரூபாய் ஆனது. பிறகு 2008ஆம் ஆண்டு வரையில் விலையில் மாற்றமின்றி ஐஸ்கிரீம்களை விற்பனை செய்து வந்தோம்’ என்று வினோத் கூறினார்.

2008ஆம் ஆண்டுக்கு பின்னர் தொழில் பிரச்சனைகளை எதிர்கொண்டதால், விற்பனை நிலையத்தை மூட வேண்டியதாகிவிட்டது. அதன் பின்னர் 2022ஆம் ஆண்டில், வினோத் மீண்டும் அந்த ஐஸ்கிரீம் விற்பனை நிலையத்தைத் திறந்து, ஒரு கூப்பின் விலையை இரண்டு ரூபாயாக நிர்ணயிக்கும் மரபைத் தொடர்ந்துள்ளார்.

அக்கம்பக்கத்தில் உள்ள மக்கள் அனைவரும் இந்த ஐஸ்கிரீம் கடையை ‘ரெண்டு ரூபாய் ஐஸ்கிரீம் கடை’ என்று வர்ணிக்கின்றனர். நாட்கள் செல்லச் செல்ல, மக்கள் அந்த கடையின் ஸ்பெஷல் கோன் ஐஸ்கிரீமை கேட்டதாக வினோத் கூறியுள்ளார். இந்த விலை அறிமுக சலுகையாக இருக்க வேண்டும் என்று தான் நினைத்ததாகவும், ஆனால் மக்களின் ஆதரவால் விலையை உயர்த்த மனமில்லாமல் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Chennai, Ice cream, Trending