Home /News /chennai /

இலவசங்கள் தொடர்பான வழக்கு 3 நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வுக்கு மாற்றம் - தலைமை நீதிபதி ரமணா உத்தரவு

இலவசங்கள் தொடர்பான வழக்கு 3 நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வுக்கு மாற்றம் - தலைமை நீதிபதி ரமணா உத்தரவு

இலவசங்கள் தொடர்பான வழக்கு புதிய அமர்வுக்கு மாற்றம்

இலவசங்கள் தொடர்பான வழக்கு புதிய அமர்வுக்கு மாற்றம்

மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு எது என உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி முடிவு செய்வார் தலைமை நீதிபதி என்.வி ரமணா தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Delhi, India
    இலவசத் திட்ட அறிவிப்புகளை முறைப்படுத்த கோரிய வழக்கில் விரிவான விசாரணை தேவை என்பதால் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா அமர்வு உத்தரவிட்டுள்ளது.

    தேர்தலின் போது அறிவிக்கப்படும் இலவச வாக்குறுதிகளுக்கு தடை விதிக்க கோரி, பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய என்பவர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த, பொது நல வழக்கு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி ரமணா அமர்வில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்த போது வழக்கின் முக்கியத்துவம் கருதி விரிவான விவாதம் தேவைப்படுகிறது என்பதால் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம் செய்யப்படும் எனக் கூறி வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில் , இவ்வழக்கின் மீதான அதிகாரப்பூர்வமான உத்தரவை தலைமை நீதிபதி என்.வி ரமணா, நீதிபதிகள் ஹீமா கோலி மற்றும் சி.டி.ரவிக்குமார் அமர்வு பிறப்பித்தது. உத்தரவை வாசித்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா, "இலவசங்கள் தொடர்பான அறிவிப்பு என்பது ஒரு மாநில அரசு உடனடி திவால் நிலைக்கு தள்ளப்படும் சூழ்நிலையை உருவாக்கலாம் என்றும்
    அத்தகைய இலவசங்கள் கட்சியை பிரபலப்படுத்தவே பயன்படுத்தபடுகிறது என்று மனுதாரர் தரப்பு கூறியதை சுட்டிக்காட்டினார்.

    அதே நேரம் இலவசத்தையும், வளர்ச்சி திட்டங்களையும் குழப்பிக் கொள்ள கூடாது என்று கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி, தேர்தலின் போது யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்கான உண்மையான அதிகாரம் ஜனநாயக முறையில் மக்களுக்கு இருப்பதாகவும் தெரிவித்தார்.

    மேலும் வழக்கின் சிக்கலான தன்மை கருதியும் 2013ஆம் ஆண்டு சுப்பிரமணிய பாலாஜி தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளதால் அதன் அவசியம் கருதி இவ்வழக்கு மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்படுவதாக அறிவித்தார். அதே நேரத்தில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு எது என உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி முடிவு செய்வார் எனவும் தலைமை நீதிபதி என்.வி ரமணா தெரிவித்தார்.

    இதையும் படிங்க: ‘காங்கிரஸ் கட்சியின் படு தோல்விகளுக்கு ராகுல்தான் காரணம்’ – குலாம் நபி ஆசாத் பரபரப்பு குற்றச்சாட்டு

    மேலும் அவர், "இத்தகைய பிரச்னைகளை ஆராய நிபுணர் குழுவை அமைக்கலாம் என்று மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கிய தலைமை நீதிபதி, இலவசங்கள் தொடர்பான இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை தேவைப்படுகிறது.
    குறிப்பாக இவ்விவகாரத்தில் நீதித்துறையின் தலையீடு எந்த அளவுக்கு இருக்கலாம்? நீதிமன்றத்தால் நிபுணர் குழுவை நியமிப்பது இந்த விவகாரத்தில் எந்த அளவிற்கு உதவும்?

    2013ம் ஆண்டு இலவசங்கள் கூடாது என தொடரப்பட்ட சுப்ரமணிய பாலாஜி வழக்கின் தீர்ப்பு பரிசீலிக்கப்பட வேண்டுமா? என்பதற்கு விரிவான விசாரணை தேவை. எனவே வழக்கின் தீவிர தன்மையை கருதி வழக்கு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம் செய்யப்படுகிறது. மேலும், 2013ம் ஆண்டு சுப்பிரமணிய பாலாஜி தீர்ப்பை இவ்வழக்கின் தீவிரம் கருதி மறுபரிசீலனை செய்ய வேண்டும். அனைத்து அறிவிப்புகளையும் இலவசங்களாக கருத முடியாது" என தெரிவித்தார். தொடர்ந்து இவ்வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Supreme court, Supreme court judge

    அடுத்த செய்தி