முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர் , கருணாநிதி ஆகியோரின் நட்பு நாடக கொட்டகையின் சுவாரஸ்ய கதை. இது பல ஆண்டுகளாக தனியார் ஆக்கிரமிப்பிலிருந்த அந்த இடத்தை தற்போது மாநகராட்சி மீட்டுள்ளது
திரைத்துறையில் கோலோச்சிய எம் ஜி.ஆர் ,சிவாஜி, கலைஞர் கருணாநிதி, கே.பி.சுந்தராம்பாள், தியாகராஜ பாகவதர் போன்றவர்கள் அக்காலத்தில் நாடகத்துறையிலிருந்தே துவக்கினார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் சென்ட்ரல் அருகே உள்ள வால்டாக்ஸ் சாலையில் ஒத்தவாட தெருவில் உள்ள இந்த நாடக கொட்டகை நூறாண்டுகள் பழமையானது.
தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த நூறு வருட பழமையான நாடக கொட்டகையை சென்னை மாநகராட்சி அன்மையில் மீட்டுள்ளது.
பாரம்பரிய நாடக கொட்டகையான இதில் தியாகராஜ பாகவதர், கே.பி.சுந்தராம்பாள், கருணாநிதி, எம்ஜிஆர், சிவாஜி, எம்.ஆர்.ராதா என பலர் தொடக்க காலத்தில் நாடகங்கள் அரங்கேற்றம் செய்துள்ளனர்.
குறிப்பாக எம்ஜிஆர் தன் தாயார் சத்யபாமாவுடன் அந்தகாலத்தில் ஒத்தவாட தெரு நாடக கொட்டகை அருகே வீட்டில் வசித்து நாடகங்களை அரங்கேற்றியுள்ளார். அதே காலகட்டத்தில் கருணாநிதியும் தன் எழுத்தில் நாடகங்களை அரங்கேற்றியுள்ளார். அப்போது முதலே எம்.ஜி.ஆர் ,கருணாநிதி இருவருக்கும் நட்பு தொடங்கியிருக்கிறது. இத்தகைய சிறப்புமிக்க இந்த கொட்டகை பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத காரணத்தால் தனியாரின் ஆக்கிரமிப்பின் கீழ் சென்று தற்போது அரசு கையகப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ''உங்களில் ஒருவன் எழுதும் மடல்''.. தொண்டர்களுக்கு நெகிழ்ச்சியாய் கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்!
மற்ற மாநிலங்களில் எங்கும் இல்லாத வகையில் தமிழக அரசியலையும் திரைத்துறையையும் பிரிக்க முடியாது அந்தவகையில் நாடகத்திலிருந்து திரைத்துறைக்கு வந்து நாடாண்டவர்களின் வரலாற்றோடு இணைந்த இந்த நாடக கொட்டகை பல ஒப்பனைகளையும் , ஒத்திகைகளையும் பார்த்து சீர்மிகு பல கலைஞர்களை கண்டிருந்தாலும் காலஓட்டத்தில் கலையிழந்து சிதிலமடைந்து பலர் வாழ்வை கண்டதோர் மவுன சாட்சியாக நின்று கொண்டுள்ளது..
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: DMK Karunanidhi, MGR