Home /News /chennai /

கட்டிட வேலை செய்வதுபோல் ஏமாற்றி கஞ்சா விற்பனை.. ஒடிசா இளைஞர் கைது.. தலைமறைவான மனைவிக்கு வலை

கட்டிட வேலை செய்வதுபோல் ஏமாற்றி கஞ்சா விற்பனை.. ஒடிசா இளைஞர் கைது.. தலைமறைவான மனைவிக்கு வலை

சென்னையில் கஞ்சா விற்றவர் கைது

சென்னையில் கஞ்சா விற்றவர் கைது

Chennai | சென்னை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒடிசாவை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
    தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையை அறவே ஒழிக்கும் விதமாக காவல் ஆணையாளர் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் கேளம்பாக்கம் பகுதியில் கஞ்சா புகைக்கும் பழக்கமுடைய ஒருவரை பிடித்து விசாரிக்க அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் கட்டிட வேலை செய்யும் ஒரிசாவை சேர்ந்த அக்ஷயா பிரிதா என்பவரை பிடித்து விசாரித்தனர்.

    அப்போது அவர் படூரில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி இருந்து கொண்டு, கட்டிட வேலை செய்வதுபோல் கஞ்சாவை 5 கிராம். 10 கிராம் என சிறு சிறு பொட்டலங்களாக போட்டு கல்லூரி மாணவர்கள் மற்றும் கட்டிட தொழிலாளர்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர்க்கு விற்பனை செய்து வந்துள்ளார்.

    மேலும் அக்ஷயா பிரிதாவின் மனைவி ஜமுனா என்பவர் ஒடிசாவில் இருந்து ரயிலில் கஞ்சாவை கடத்தி வந்து கணவனிடம் கொடுத்துவிட்டு விற்றப்பணத்தை வாங்கி செல்வார் என விசாரணையில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் அவர் தங்கியிருந்த அறையை சோதனை செய்ததில் 2 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்ததை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் அக்ஷயா பிரிதா மீது வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    மேலும் தலைமறைவாக உள்ள அவரது மனைவி ஜமுனாவை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    Also see... புதுமைப் பெண் திட்டத்தை முதல்வர் துவங்கி வைத்தார்

    கடந்த மூன்று மாதங்களில் 37 வழக்குகள் பதியப்பட்டு, 87 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 94.90 கிலோ கஞ்சா, 25 கிராம் கொகைன், 142 கிராம் மெத்தபட்டமைன், 632 போதை மாத்திரைகள், 53 கிலோ குட்கா, 4 இருசக்கரவாகனங்கள், 3 நான்கு சக்கரவாகனங்கள் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    செய்தியாளர்: ப.வினோத்கண்ணன், இசிஆர் 
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Arrested, Cannabis, Chennai, Crime News

    அடுத்த செய்தி