அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி,உதயகுமாருக்கு மிரட்டல் விடுத்த ஓ.பி.எஸ் ஆதரவாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இரு அணிகளாக பிரிந்து இரு தரப்பை சேர்ந்தவர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஓ.பன்னீர்செல்வம் இருக்கும் நிலையில், இந்த பதவியை ஆர்.பி.உதயகுமாருக்கு எடப்பாடி பழனிசாமி வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. பழனிசாமியின் ஆதரவாளரான ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், ‘ஓ.பன்னீர்செல்வம் அதிமுக-வில் மீண்டும் இணைந்தால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என பேசியதாக கூறப்படுகிறது.
பூலித்தேவன் பிறந்தநாள் விழாவுக்காக தென்காசி மாவட்டம் நெற்கட்டும் செவலுக்கு ஆர்.பி.உதயகுமார் வியாழக்கிழமையான இன்று செல்ல இருக்கிறார். இந்நிலையில் ஆர்.பி.உதயகுமாருக்கு தென்காசியில் இருந்து சரவணபாண்டியன் என்பவர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.
முதலில் உதயகுமாரை பாராட்டி பேசுவதுபோல பேசுபவர் பின்னர், ஓபிஎஸ் தலைமையேற்றால் தற்கொலை செய்துகொள்வேன் எனக் கூறினீர்கள். எங்கள் ஊருக்கு வரும் உங்களுக்கு பாடை மற்றும் மாலைகள் தயாராக இருக்கிறது.
Also see... பல்லாவரத்தில் குதிரை எட்டி உதைத்ததில் 4 வயது சிறுவன் மரணம்
தூக்கிச் செல்லவும் ரெடியாக இருக்கிறோம் என மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியிருந்தார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த மகேந்திரவாடி கூட்டுறவு சங்கத் தலைவராகவும், தென்காசி மாவட்ட கழக இளம்பெண்கள் பாசறை செயலாளருமாகவும் சரவண பாண்டியன் இருக்கிறார். சரவணபாண்டியனின் மிரட்டல் ஆடியோ வெளியாகி அதிமுகவினரிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சரவணபாண்டியனை கைது செய்துள்ளனர். அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சரவணபாண்டியன் மீது இதே விவகாரம் தொடர்பாக சங்கரன்கோவில் தாலுகா காவல் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, Arrested, Chennai, OPS - EPS, R.B.Udhayakumar