ஹோம் /நியூஸ் /சென்னை /

“அதிமுக ஒன்றுபட வேண்டும்.. அதுதான் பிரதமர் மோடியின் விருப்பம்” - ஓபிஎஸ் பேச்சு

“அதிமுக ஒன்றுபட வேண்டும்.. அதுதான் பிரதமர் மோடியின் விருப்பம்” - ஓபிஎஸ் பேச்சு

ஓபிஎஸ், ஏசிஎஸ்

ஓபிஎஸ், ஏசிஎஸ்

எடப்பாடி பழனிசாமி தரப்பின் நிலைப்பாட்டைத்தான் உலக மகா அரசியல் வித்தகர் ஜெயகுமார் கூறி விட்டாரே - ஓபிஎஸ்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் கிடைக்காமல் போனால் அதற்கு நான் காரணம் இல்லை. எடப்பாடி பழனிசாமி தரப்பினர்தான் இந்த இக்கட்டான சூழலை உருவாக்கியுள்ளனர் என ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள புதிய நீதிக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ஏ. சி.சண்முகத்தை முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சந்தித்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு ஆதரவு கோரினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓ. பன்னீர்செல்வம், "ஈரோடு கிழக்கு தொகுதியில் உறுதியாக போட்டியிடுவோம். இந்தியாவை வல்லரசாக ஆக்க பிரதமர் முயற்சித்து வருகிறார். பாஜக விருப்பம் தெரிவித்தால் ஆதரவளிப்போம் என ஏற்கனவே தெரிவித்திருந்தேன். தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் அங்கம் வகித்து வருகிறோம். இந்த இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் நிற்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

31ம் தேதிதான் வேட்பு மனு தாக்கல் தொடங்க உள்ளது, தேர்தலுக்கு இன்னும் நாள் இருக்கிறது. வேட்பாளரை விரைவில் அறிவிப்போம். அதிமுக தொண்டர்கள் மனநிலை பிரிந்துள்ள அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்பதே. பிரதமர் அதிமுக ஒன்றுபட வேண்டும் என்றே விரும்புகிறார். எங்களை சந்திக்கும்போது பிரதமர் இதையே கூறுகிறார்.

எடப்பாடி பழனிசாமியை நேரில் சென்று சந்திப்பீர்களா என்று கேட்கின்றீர்கள். ஆனால் அவர்களுடைய நிலைப்பாட்டைத்தான்

உலக மகா அரசியல் வித்தகர் ஜெயகுமார் கூறி விட்டாரே.

இரட்டை இலை சின்னம் கழக ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்தே கை எழுத்து இடவேண்டும். சின்னம் கிடைக்காமல் போனால் அதற்கு பன்னீர்செல்வம் ஆகிய நான் காரணமாக இருக்க மாட்டேன். இக்கட்டான சூழலை எடப்பாடி தரப்பினர்தான் உருவாக்கியுள்ளனர்” என தெரிவித்தார்.

பாஜக அலுவலகம் சென்றது குறித்து அமைச்சர் உதயந்தியின் விமர்சனத்திற்கு பதிலளித்த அவர், “கமலாலயம் சென்று விடாதீர்கள் என்று உதயநிதி சொன்னார். அதற்கு நான் எங்கள் கார் ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகை நோக்கி செல்லும் என்றுதான் சொன்னேன். மற்ற இடங்களுக்கு செல்ல மாட்டேன் என்று நான் சொல்லவில்லை" என கூறினார்.

First published:

Tags: ADMK, Chennai, Erode Bypoll, Erode East Constituency, OPS - EPS