ஹோம் /நியூஸ் /சென்னை /

பாஜக போட்டியிட்டால் ஆதரவு.. அண்ணாமலையை சந்தித்த பின் ஓபிஎஸ் பேட்டி!

பாஜக போட்டியிட்டால் ஆதரவு.. அண்ணாமலையை சந்தித்த பின் ஓபிஎஸ் பேட்டி!

ஓபிஎஸ், அண்ணாமலை

ஓபிஎஸ், அண்ணாமலை

மக்கள் நலன் பற்றி அண்ணாமலையிடம் மனம் விட்டு பேசினோம், சந்திப்பு மகிழ்ச்சிகரமாக இருந்தது - ஓபிஎஸ்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் தேசிய நலன் கருதி முழு ஆதரவு அளிப்பேன் என ஓபிஎஸ் தெரிவித்தார்.

அதிமுக ஓபிஎஸ், ஈபிஎஸ் என இரு அணிகளாக செயல்பட்டு வரும் சூழலில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவின் விருப்பதற்கு ஏற்ப தொகுதியை விட்டுக் கொடுப்பதாக தமாகா தலைவர் ஜி.கே வாசன் அறிவித்துள்ளார். இதையடுத்து, வேட்பாளரை இறுதி செய்யும் பணியில் எடப்பாடி பழனிசாமி தரப்பு ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இடைத்தேர்தலில் தாங்களும் போட்டியிட உள்ளதாக அறிவித்தார்.

இதையடுத்து இடைத்தேர்தல் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் என இருதரப்பினரும் கூட்டணி கட்சியினரை சந்தித்து ஆதரவு கோரி வருகின்றனர். அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி அணியினர் தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு சென்று அண்ணாமலையை நேரில் சந்தித்து ஆதரவு கோரினர்.  இதைத்தொடர்ந்து  ஓ.பன்னீர்செல்வமும் தனது ஆதராவளர்களுடன் பாஜக அலுவலகம் சென்ற அண்ணாமலையை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார்.  அவருடன் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:- 

பாஜக தலைவர் அண்ணாமலையை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன். தேர்தல் குறித்து என்னுடைய நிலைப்பாட்டை காலையிலேயே மிகத் தெளிவாக எடுத்துரைத்துள்ளேன். மக்கள் நலன் பற்றி அண்ணாமலையிடம் மனம் விட்டு பேசினோம், சந்திப்பு மகிழ்ச்சிகரமாக இருந்தது.

அப்போது ஒரு நிருபர் பாரதிய ஜனதா கட்சியை போட்டியிட்டால் ஆதரவு தருவீர்களா என்ற கேள்வி எழுப்பினர். பாஜக போட்டியிட்டால் தேசிய நலன் கருதி முழு ஆதரவு அளிப்பேன்.” என்றார்.

First published:

Tags: ADMK, Annamalai, BJP, Erode Bypoll, OPS