Home /News /chennai /

மோதலுக்கு பிறகு முதன்முறையாக நாளை அதிமுக அலுவலகம் செல்கிறார் ஈபிஎஸ்..!

மோதலுக்கு பிறகு முதன்முறையாக நாளை அதிமுக அலுவலகம் செல்கிறார் ஈபிஎஸ்..!

எடப்பாடி பழனிசாமி - அதிமுக தலைமை அலுவலகம்

எடப்பாடி பழனிசாமி - அதிமுக தலைமை அலுவலகம்

72 நாட்களுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி நாளை அதிமுக தலைமை அலுவலகம் செல்கிறார் . மேலும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu | Chennai
72 நாட்களுக்கு பிறகு கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு நாளை செல்கிறார் .

ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஓபிஎஸ் தரப்பின் எதிர்ப்பை மீறி அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இந்த பொதுக் குழு நடந்த அதே நேரத்தில் ஓபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றார்.

அப்போது ஓபிஎஸ் தரப்புக்கும் இபிஎஸ் தரப்புக்கும் இடையே நடந்த கலவரத்தால் அங்கிருந்த பொருட்கள் சேதப்படுத்தப்பட்டன. மேலும், சிலர் காயமடைந்தனர். இதையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார், விசாரணை நடத்தி வரும் நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க கோர்ட் உத்தரவிட்டது. மேலும், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு தொண்டர்களும் நிர்வாகிகளும் செல்ல ஒரு மாதம் தடை விதித்தது.

ALSO READ | அதிமுக அலுவலகத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை... ஜூலை 11 நிகழ்ந்த மோதல் தொடர்பாக ஆய்வு

இந்த தடை முடியும் நிலையில் தான்,  அதிமுக பொதுக் குழு கூட்டத்திற்கு எதிராக ஓபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் ஓபிஎஸ்-க்கு சாதகமாக உயர்நீதிமன்ற தனிநீதிபதி தீர்ப்பளித்தார். இந்த நிலையில் பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்தார்.

அதன் மீது கடந்த வெள்ளிக்கிழமை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் அதிமுக பொதுக் குழு செல்லும் என தீர்ப்பளிக்கப்பட்டது. இதனால், 72 நாட்களுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி நாளை அதிமுக தலைமை அலுவலகம் செல்கிறார் . இது தொடர்பாக அதிமுக தலைமை கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் நாளை காலை 10 மணிக்கு எடப்பாடி பழனிசாமி  அதிமுக தலைமை அலுவலகம் வரவுள்ளதாகவும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Published by:Anupriyam K
First published:

Tags: ADMK, AIADMK, Cm edapadi palanisami, EPS, OPS - EPS

அடுத்த செய்தி