சென்னையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சமூக இணையதளம் வழியாக ஒரிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து கொண்டே சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் விபச்சார தொழிலை நடத்தி வந்த ஜோதி ரஞ்சன் ஜெனா என்கிற ராகுலை புவனேஸ்வர் சென்று தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், அவருடன் தொழிலில் ஈடுபட்டு வந்த அவருடைய நண்பர் கிருஷ்ணா சந்திரா ஸ்வைனையும் கைது செய்துள்ளனர்.
ஜோதி ரஞ்சன் மீது சென்னை முழுவதும் உள்ள காவல் நிலையங்கள் மற்றும் விபச்சார தடுப்பு பிரிவில் 15க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் சமூகவலைதளம் மூலமாக விபச்சாரத்தை நடத்தி வருவதால் இவரை பிடிக்க முடியாமல் சென்னை போலீசார் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தேடிவந்தனர்.
பிரபலமான டேட்டிங் இணையதளமான லோகண்டோ மூலமாக விபச்சார தொழிலை இவர் நடத்தி வந்தது தெரிய வந்துள்ளது. இதற்கென பிரத்யோகமாக வாட்ஸ்அப் எண்ணை கொடுத்து அதன் மூலம் தங்களை தொடர்பு கொள்பவர்களிடம், தங்களிடம் இருக்கக்கூடிய பெண்களுடைய ஆபாச புகைப்படத்தை அனுப்பி வாடிக்கையாளரை கவர்ந்து இருக்கிறார்கள். அதன் பின்பாக சென்னையில் உள்ள கிண்டி, நுங்கம்பாக்கம், தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கூடிய சர்வீஸ் அபார்ட்மெண்ட்கள் மற்றும் பிரபலமான ஹோட்டல்களில் ஆன்லைன் மூலமாக அறைகளை புக் செய்து விபச்சாரத்தை நடத்தி வந்துள்ளனர்.
குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்துக்கு 20 ஆயிரம் என ஆரம்பித்து 40 ஆயிரம் வரை விபச்சாரத்தை நடத்தி வந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

இந்தியா முழுவதும் ஆன்லைன் விபச்சாரம்.. 10 ஆண்டாக தண்ணி காட்டியவர்களை ஒடிசா சென்று பிடித்த சென்னை போலீஸ்!
ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு செல்போன், வாட்ஸ் அப் குரூப் என மொத்தம் எட்டு செல்போன்களை வைத்து அவர் விபச்சாரத்தை நடத்தி வந்திருக்கிறார். 50க்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் குரூப்களை வைத்து இந்தியா முழுவதும் விபச்சாரத்தை நடத்தி வந்ததை அறிந்த போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் பிரபலமாக இருக்கக்கூடிய நட்சத்திர ஹோட்டல்களில் மட்டுமே இவர் இந்த தொழிலை நடத்தி வந்திருக்கிறார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
விபச்சாரத்துக்கு கல்லூரி மாணவிகள், குடும்ப தலைவிகள், சினிமா நட்சத்திரங்கள் என பலரையும் மும்பை உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து விமானங்களில் டிக்கெட் புக் செய்து அவர்களை சென்னை வரவழைத்து விபச்சாரம் செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆண்டிற்கு 3 முதல் 5 கோடி வரை சம்பாதித்து வந்ததும் தெரியவந்துள்ளது.
மேலும், இவரை நம்பி வரக்கூடிய வாடிக்கையாளர்களோ அல்லது பெண்களோ அவருக்கு போன் செய்து இரண்டு ரிங் கொடுத்துவிட்டு, பின் ஒரு மணி நேரத்திற்குள் மீண்டும் போன் செய்யவில்லை என்றால் உடனடியாக, அவர்கள் ஓட்டல்களில் தங்கும் அறைகளை காலி செய்துவிட்டு சிட்டாய் பறந்து விடுவது வழக்கமாக வைத்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
ஒரிசா மாநிலம் புவனேஸ்வரில் தங்கியிருந்த ஜோதி ரஞ்சன் ஜெனா என்கிற ராகுலை, போலீசார் நெருங்குவதை அறிந்த ராகுல் உடனடியாக காரில் தப்பியிருக்கிறார் 20 கிலோமீட்டர் வரை ஒரிசா மாநில போலீசார் உதவியுடன் துரத்திச் சென்று ராகுலை பிடித்து கைது செய்துள்ளனர் சென்னை போலீசார்.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உங்கள் நகரத்திலிருந்து(Chennai)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.