Home /News /chennai /

லோன் ஆப் மூலம் ஸ்விக்கி உணவு டெலிவரி ஊழியரிடம் நூதன மோசடி...

லோன் ஆப் மூலம் ஸ்விக்கி உணவு டெலிவரி ஊழியரிடம் நூதன மோசடி...

லோன் அப் மூலம் மோசடி

லோன் அப் மூலம் மோசடி

Online loan app: பெட்ரோல் பணத்தை முன்கூட்டியே ஒரு செயலி மூலம் பெற்றுத் தருவதாகக் கூறியுள்ளார். அதனை நம்பிய ஸ்விக்கி ஊழியரிடம் ஒரு செயலியை டவுன்லோட் செய்யச் சொல்லியிருக்கிறார்.

    சென்னையில், ஸ்விக்கி ஊழியர்களை குறிவைத்து லோன் ஆப் செயலி மூலம் நூதன முறையில் பண மோசடியில் ஈடுபட்ட இளைஞர் சிக்கியுள்ளார். ஸ்விக்கு ஊழியர்களிடம் பெட்ரோல் பணத்தை முன்கூட்டியே பெற்றுத் தருவதாகக் கூறி மோசடியை அரங்கேற்றியுள்ளார் சிக்கிய இளைஞர்.

    கோயம்பேடு, மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் தனியார் உணவு டெலிவரி செய்யும் ஸ்விக்கி மற்றும் zomato நிறுவனங்களில் ஏராளமான இளைஞர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த புதன் கிழமை இளைஞர் ஒருவர் ஸ்விக்கி ஊழியர் ஒருவரை குறி வைத்து அவரைப் பின்தொடர்ந்து சென்றுள்ளார்.

    குறிப்பிட்ட இடத்தில் அவரை மடக்கிய இளைஞர், நிறுவனத்திலிருந்து வரவேண்டிய பெட்ரோல் பணத்தை முன்கூட்டியே ஒரு செயலி மூலம் பெற்றுத் தருவதாகக் கூறியுள்ளார். அதனை நம்பிய ஸ்விக்கி ஊழியரிடம் ஒரு செயலியை டவுன்லோட் செய்யச் சொல்லியிருக்கிறார். அவரும் குறிப்பிட்ட செயலியை தனது செல்போனில் டவுன் லோட் செய்ய அதில் சில தகவல்களை சேர்த்த பின் உடனடியாக ஸ்விக்கி ஊழியரின் அக்கவுண்டுக்கு 2 ஆயிரம் ரூபாய் வந்துள்ளது.

    இதனால் மகிழ்ச்சியடைந்த ஊழியரிடம் அதில் ஆயிரம் ரூபாயை தனக்குத் தந்து விடுமாறு கூறியுள்ளார். அடுத்த மாதம் முதல் இதே செயலியை பயன்படுத்தி முன்கூட்டியே பெட்ரோல் பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு கூறிவிட்டு சென்று விட்டார். அவர் கிளம்பிச் சென்றதும் தான், நூதன முறையில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார் இளைஞர்.

    இதையும் படிங்க: ஆபரேசன் கோலிவுட்: ரூ.200 கோடி வருமானம் மறைப்பு... ரூ.26 கோடி ரொக்கம், ரூ.3 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

    சிறிது நேரத்தில் அவருடைய செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் 2 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளதாகவும் அதனை குறிப்பிட்ட தேதிக்குள் வட்டியுடன் திரும்பக் கட்டுமாறும் குறிப்பிட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். தான் ஏமாற்றப்பட்டது குறித்து சக ஊழியர்களிடம் தெரிவித்து நொந்து கொண்டார் இளைஞர்

    மறுநாள் மீண்டும் அதே இளைஞர் மற்றொரு ஸ்விக்கி ஊழியரை குறிவைத்துள்ளார். இந்த முறை உஷாரான ஊழியர் சக ஸ்விக்கி ஊழியர்களுக்கு ரகசியமாக தகவல் கொடுத்து விட்டு இளைஞரிடம் பேச்சு கொடுத்துள்ளார். விரைந்து வந்த சக ஊழியர்கள் இளைஞரை சுற்றி வளைத்துப் பிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் பெயர் கார்த்திக் என்பதும், ரிங் என்ற லோன் ஆப் மூலம் இந்த மோசடியை அரங்கேற்றியதும் தெரியவந்தது.

    மேலும் படிக்க: வரும் 30ம் தேதிக்குள் உரிமம் பெறாத விடுதிகள் மூடப்படும்-திருச்சி ஆட்சியர் அறிவிப்பு

    பிடிபட்ட இளைஞரை மதுரவாயில் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.  ஆனால் மதுரவாயல் காவல் நிலையத்திலோ இது தங்கள் எல்லைக்குள் வரவில்லை கோயம்பேடுக்கு செல்லுங்கள் என்று அனுப்பி வைத்துள்ளனர், அங்கிருந்து கோயம்பேடு காவல் நிலையத்திற்கு அவரை அழைத்து சென்ற போது அங்கிருந்த போலீசாரம் சரிவர ஒத்துழைக்காமல் அந்த வாலிபரின் வீட்டு விலாசத்தை மட்டும் வாங்கி எழுதிக்கொண்டு அவரை அனுப்பி வைத்துள்ளனர்,போலீசார் அலட்சியம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஸ்விக்கி ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    செய்தியாளர் - சோமசுந்தரம்
    Published by:Murugesh M
    First published:

    Tags: Chennai, Crime News, Food Delivery boys, Loan app

    அடுத்த செய்தி