ஹோம் /நியூஸ் /சென்னை /

மூளைச்சாவு...ஒன்றரை வயது குழந்தையின் உடல் உறுப்புகள் தானம்...!

மூளைச்சாவு...ஒன்றரை வயது குழந்தையின் உடல் உறுப்புகள் தானம்...!

ராஜீவ் காந்தி மருத்துவமனை

ராஜீவ் காந்தி மருத்துவமனை

18 மாத குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்படுவது இதுவே முதன்முறையாகும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த ஒன்றரை வயது குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

ஆந்திரா மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த ஒன்றரை வயது ஆண் குழந்தை வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த போது, தவறி விழுந்து தலையில் காயமடைந்தது. இதையடுத்து, கடந்த ஒன்றாம் தேதி மேல்சிகிச்சைக்காக அந்த குழந்தை, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி மூளை சாவு அடைந்த நிலையில், உயிர் பிழைப்பதற்கான சாத்தியம் மிகக் குறைவு என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, தங்கள் குழந்தையின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முன்வந்தனர். அதன்படி குழந்தையின் இதயம், சிறுநீரகங்கள், கல்லீரல் உள்ளிட்டவை தானமாக பெறப்பட்டு, 2 குழந்தைகளுக்கு பொருத்தப்பட்டன. 18 மாத குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்படுவது இதுவே முதன்முறையாகும்.

First published:

Tags: Chennai, Organ donation, Rajiv gandhi Hospital