சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை போக்குவரத்து காவல்துறை இணைந்து நடத்தும் ஆன் தி ஸ்ட்ரீட் ஆப் சென்னை நிகழ்ச்சி பொதுமக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
வீதிகளில் இசை கச்சேரிகள், நாடகங்கள், தெருக்கூத்துக்கள் கண்ட சமூகமாகவே தமிழ் சமூகம் இருந்தது காலப்போக்கில் நவீன நாகரிகம் வளர வளர இவை மெல்ல மறைந்து வருகின்றன. இவற்றை மீட்டெடுக்கவும் மக்களை உற்சாகப்படுத்தவும் இசைக்கலைஞர்களை ஊக்குவிக்கவும் வகையில் சென்னை மாநகராட்சி, சென்னை காவல்துறையுடன் இணைந்து முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளனர்.
சென்னையில் முக்கிய வீதிகளில் ஆன் தி ஸ்ட்ரீட் ஆப் சென்னை (On the street of Chennai) எனும் கலை நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். இதில் இளைஞர்கள் பலர் சேர்ந்து சென்னை தியாகராயநகரில் உள்ள பாண்டி பஜார் மற்றும் அண்ணா நகர் டவர் பார்க்கில் வார இறுதிகளில் இசை கச்சேரிகள் நடத்தி வருகிறார்கள். அதில் அவர்கள் பாடும் திரைப்பட பாடல்கள் மக்கள் மனதை வெகுவாக கவர்ந்து வருகிறது.
ஏற்கனவே சென்னையில் மக்கள் கூடும் இடங்கலான மெட்ரோ ரயில் நிலையங்கள், பெசன்ட் நகர் கடற்கரை, இந்த நிகழ்ச்சி நடைபெற்றபோது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இளைஞர்கள் மற்றும் குடும்பத்தார் தங்கள் குழந்தைகளுடன் வருகை தந்து இசை நிகழ்ச்சியை கொண்டாடுகின்றனர்.
இதுபோன்று நிகழ்ச்சி குறித்து பெரிய அளவில் எதிர்பார்ப்பு இல்லாமல் வந்தாலும் இங்கு வந்த பின் மகிழ்ச்சியாக உள்ளது என்றும் வளர்ந்து வரும் தலைமுறையினருக்கு இதுபோன்ற நிகழ்ச்சிகளை அடிக்கடி நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் குறிப்பிட்ட ஒரு இசையமைப்பாளர் இசைத்த படலை மட்டும் படாமல் எல்லா வகையான பாடல்களும் இங்கு உள்ள குழு பாடுகிறது.
இசை என்ற மொழி எல்லோரையும் ஒரு திசையில் இணைக்கும் என்பதற்கு ஏற்ப சென்னை தியாகராய நகரில் கூடியிருந்த மக்களை வெகுவாக கவர்ந்தது இந்த இசை நிகழ்ச்சி. அனைத்து ஞாயிற்றுகிழமைகளிலும் தொடர்ச்சியாக இது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதால் மக்கள் தங்கள் குடும்பங்களுடன் இங்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.