ஹோம் /நியூஸ் /சென்னை /

சென்னையில் கனமழையால் கட்டிடம் இடிந்து விழுந்ததில் மூதாட்டி பலி... ஆபத்தான நிலையில் 3 பேர் மருத்துவமனையில் அனுமதி..

சென்னையில் கனமழையால் கட்டிடம் இடிந்து விழுந்ததில் மூதாட்டி பலி... ஆபத்தான நிலையில் 3 பேர் மருத்துவமனையில் அனுமதி..

கட்டிட இடிபாடுகள்

கட்டிட இடிபாடுகள்

Chennai Rain | கடந்த சில தினங்களாக சென்னையில் பெய்து வரும் கனமழையின் காரணமாக இந்த கட்டிடம் மிகவும் வலுவிழந்து காணப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

சென்னை சவுகார்பேட்டை NSC போஸ் சாலை மிண்ட் தெருவில் வட மாநிலத்தை சேர்ந்த சத்ரபுஜ் தாஸ் என்பவருக்கு சொந்தமான 100 வருடம் பழமையான 2 தளம் கொண்ட அடுக்குமாடி கட்டிடம் ஒன்று உள்ளது.

எப்போது வேண்டுமானாலும் விழலாம் என்ற நிலையில் இருந்த இந்த கட்டிடம் பல ஆண்டுகளாக செயல்படாமல் இருந்து வந்துள்ளது. ஆனாலும், இந்த கட்டடத்தின் கீழ் தளத்தில் ஏழு கடைகள் இயங்கி வருகின்றன. கடந்த சில தினங்களாக சென்னையில் பெய்து வரும் கனமழையின் காரணமாக இந்த கட்டிடம் மிகவும் வலுவிழந்து காணப்பட்டுள்ளது.

இந்நிலையில். சென்னையில் இன்று மாலை 6 மணிக்கு பெய்த மழையால் இந்த கட்டிடம் முழுவதுமாக இடிந்து கீழே விழுந்தது.

அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த மூதாட்டி மற்றும் மூன்று நபர்கள் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.

இதையும் படிங்க : சென்னையில் நாளை இங்கெல்லாம் மின்தடை... முன்னெச்சரிக்கையா இருங்க!

தகவலறிந்த பூக்கடை, யானை கவுனி போலீசார்  மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கட்டிட இடிபாடுகளுக்குள் மூதாட்டி உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். மேலும், மற்ற மூவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்துள்ளனர்.

உடனடியாக உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மூவரையும் மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த மூதாட்டியின் உடலை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை பிணவறைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணையில் உயிரிழந்த மூதாட்டி சவுகார்பேட்டையை சேர்ந்த 60 வயதான கங்கு தேவி என்பது தெரியவந்தது. மேலும், படுகாயமடைந்த நபர்கள் சென்னையை சேர்ந்த சங்கர் (36), மாதவரம் ராயல் அவன்யூ பகுதியைச்  சேர்ந்த சரவணன்(34), வியாசர்படி பகுதியைச் சேர்ந்த சிவகுமார்(32) என்பது தெரியவந்தது.

உயிரிழந்த கங்கு தேவி தனது வீட்டில் இருந்து அருகில் உள்ள ஜெயின் கோயிலுக்கு செல்வதற்காக செல்லும்போது கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்து உள்ளார் என்பதும், மற்ற மூன்று நபர்கள் மிண்ட் தெருவில் வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவதற்காக வந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

இதையும் படிங்க : “நாங்கள் நல்லவர்கள்” - எல்பின் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ஏஜெண்டுகள் கதறல்!

இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்தில் 30க்கும் மேற்பட்ட தீயணைப்புத் துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து யானைக்கவுனி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அமைச்சர் சேகர் பாபு அப்பகுதியை ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “செயல்படாமல் உள்ள இந்த கட்டிடத்தை இடிக்கச் சொல்லி சென்னை மாநகராட்சி கடந்த 2014-ம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால் கடை உரிமையாளர் கட்டிடத்தில் உள்ள கடைகளை அகற்றக்கூறியுள்ளார்.

கடை உரிமையாளர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். தற்போது இந்த வழக்கு நிலுவை உள்ளதால் கட்டிடத்தை இடிக்க முடியாத நிலையில் இருந்து வந்துள்ளது” என தெரிவித்தார். மேலும், காயம்பட்ட நபர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்க முதல்வர் உத்தரவிட்டதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் 66 இடங்களில் பழமையான கட்டிடங்கள் இருக்கிறது. அவை தற்போது கண்காணிக்கப்பட்டு வருகிறது. முறையாக மாநகராட்சி அதிகாரிகள் சார்பில் விளக்கம் கேட்டுள்ளது” என தெரிவித்தார்.

Published by:Karthi K
First published:

Tags: Chennai, Chennai Rain, Crime News