ஹோம் /நியூஸ் /சென்னை /

எடப்பாடி பழனிசாமி அனுப்பியது டம்மி நோட்டீஸ்.. ஓபிஎஸ் அதிரடி பேச்சு!

எடப்பாடி பழனிசாமி அனுப்பியது டம்மி நோட்டீஸ்.. ஓபிஎஸ் அதிரடி பேச்சு!

ஓபிஎஸ் - இபிஎஸ்

ஓபிஎஸ் - இபிஎஸ்

Ops pressmeet | எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு ஓ.பன்னீர்செல்வம் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டியளித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras] | Chennai

எடப்பாடி பழனிசாமி அனுப்பியது டம்மி நோட்டீஸ் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

அதிமுக கொடி, பெயர் ஆகியவற்றை பயன்படுத்துவது தொடர்பாக விளக்கம் கேட்டு ஓ.பன்னீர் செல்வத்துக்கு அதிமுக தலைமையகம் சார்பில் வக்கீல் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியும், பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனும் உள்ளனர். உயர்நீதிமன்றம் இதனை ஏற்றுக்கொண்ட நிலையில், ஓபிஎஸ் தொடர்ந்து கட்சியின் கொடி, பெயரை பயன்படுத்தி வருவது ஏன் என கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

கட்சியின் பொறுப்பு எடப்பாடி பழனிசாமி வசம் இருப்பதால், ஓபிஎஸ் இதுபோன்று செயல்படுவது குறித்து சட்ட விளக்கம் அளிக்க வேண்டும். இந்த நோட்டீஸிற்கு உடனடியாக பதிலளிக்காவிட்டால், உறுதியாக சட்ட நடவடிக்கை தொடரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று காலை எம்ஜிஆரின் நினைவுதினத்தையொட்டி ஓபிஎஸ் மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள மேடையில் ஓபிஎஸ் தலைமையில் ஏராளமான அதிமுகவினர் உறுதிமொழி ஏற்றனர்.

தொடர்ந்து, நியூஸ் 18 தமிழ் தொலைக்காட்சிக்கு ஓபிஎஸ் பிரத்யேக பேட்டி அளித்திருந்தார். அதில், எடப்பாடி பழனிசாமி அனுப்பியது டம்மி நோட்டீஸ் என தெரிவித்தார்.

First published:

Tags: ADMK, Chennai, Cm edapadi palanisami, O Pannerselvam