Home /News /chennai /

லாட்ஜில் காதலர்கள் சடலம்.. இளம்பெண்ணுக்கு பாலியல் மிரட்டல் - விசாரணையில் திடுக்கிடும் தகவல்

லாட்ஜில் காதலர்கள் சடலம்.. இளம்பெண்ணுக்கு பாலியல் மிரட்டல் - விசாரணையில் திடுக்கிடும் தகவல்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Chennai | திருவல்லிக்கேணியில் உள்ள விடுதியில் வட மாநில காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவர்களை தற்கொலைக்கு தூண்டியதாக இருவர் கைது செய்யப்பட்டனர்

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Chennai, India
சென்னை திருவல்லிக்கேணி, நெடுஞ்சாலையில் உள்ள ஒயிட் ஹவுஸ் என்ற லாட்ஜில் கடந்த 7-ம் தேதி அறை எண் 102-ல் இருந்து துர்நாற்றம் வீசுவதாக லாட்ஜ் ஊழியர்கள் திருவல்லிக்கேணி போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். திருவல்லிக்கேணி போலீசார் சம்பவ இடம் சென்று அறையை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு ஒரு ஆணும் பெண்ணும் இறந்து கிடப்பது தெரிய வந்தது.

உடனே வழக்குப்பதிவு செய்த திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்ததில் அவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் எழுதி வைத்த கடிதத்தை கண்டெடுத்தனர்.
அதில் வங்காள மொழியில் "எங்களை சேரவிடாமல் தடுத்தவர்கள், இனியாவது சந்தோஷமாக இருக்கட்டும். நாங்கள் வான்வெளியில் சந்தோஷமாக வாழ்வோம்" என்று எழுதி இருந்தது.

பெண்ணின் உடலானது அழுகிய நிலையிலும் ஆணின் உடல் அழுகாத நிலையில் இருந்ததை மீட்டு உடற்கூராய்வுக்காக ஓமந்தூரார் மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட நபர்கள் மேற்குவங்க மாநிலம் பங்குரா மாவட்டம் ராதா நகரை சேர்ந்த பிரசஞ்சித் கோஷ்(23) மற்றும் மேற்குவங்க மாநிலம் பங்குரா மாவட்டம் பிஷ்ணு பூர் பகுதியைச் சேர்ந்த அர்பிதா பால்(20) என்பது தெரியவந்தது.

மேலும், இவர்களின் தற்கொலைக்கான காரணம் குறித்து திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த 4-ம் தேதி மாலை தி.நகரில் உள்ள ஜிஆர்டி ஹோட்டலில் பி.ஆர்.ஓ.,வாக பணியாற்றி வந்த இளம் பெண் ஒருவர் காணாமல் போனதாக ஹோட்டல் ஊழியர்கள் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்த தகவல் திருவல்லிக்கேணி போலீசாருக்கு கிடைக்கப்பெற்றது. இதனால் சந்தேகம் அடைந்த திருவல்லிக்கேணி போலீசார் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் தகவல்களை பெற்று ஜி.ஆர்.டி ஹோட்டலுக்கு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட இருவரும் ஜி.ஆர்.டி ஹோட்டலில் ஊழியர்களாக பணிபுரிந்து வந்தவர்கள் என்பது தெரிய வந்தது.

Also Read:  விண்ணுலகில் ஒன்றாக வாழ்வோம்... காதலியை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட காதலன் உருக்கமான கடிதம்

குறிப்பாக அர்பிதா பால் பி.ஆர்.ஓ.(PRO) வாகவும் பிரசிஞ்சித் சர்வராகவும் அந்த ஹோட்டலில் பணிபுரிந்து காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் இருவரின் காதலுக்கு சம்மதம் வாங்குவதற்காக இரண்டு மாதத்திற்கு முன்பாக தனது சொந்த ஊரான மேற்கு வங்கத்திற்கு சென்று கடந்த மூன்றாம் தேதி மாலை ரயில் மூலமாக பிரசிஞ்சித் சென்னை வந்துள்ளார். அவரை அழைப்பதற்காக அர்பித்தா பால் ரயில் நிலையம் சென்றவர் அதன் பிறகு ஹோட்டலுக்கு வரவில்லை என்பதும் தெரியவந்தது.

மேலும், போலீஸ் விசாரணையில் ஹோட்டலில் சர்வராக பணிபுரியும் அசாமைச் சேர்ந்த தர்மா என்பவர் காதலர்கள் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட அன்று ஹோட்டலில் சொல்லிக் கொள்ளாமல் தலைமறைவானது தெரியவந்தது. இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் தலைமறைவான தர்மாவின் நண்பர்களான ஆந்திராவைச் சேர்ந்த நிதிஷ்குமார்(22), திருவண்ணாமலையைச் சேர்ந்த ராஜா(32) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

நிதிஷ் குமார் மற்றும் ராஜா ஆகியோரின் செல்போனை பறிமுதல் செய்து சோதனை செய்தபோது அதில் தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் புகைப்படங்கள் இருப்பது போலீசருக்கு தெரிய வந்தது.
இதனையடுத்து நித்திஷ் குமார் மற்றும் ராஜாவை போலீசார் அவர்கள் பாணியில் விசாரிக்க பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

தற்கொலை செய்து கொண்ட அர்பித்தா பால் என்ற பெண்ணை மிரட்டி தங்களிடம் தகாத உறவில் இருக்குமாறு நிதிஷ் குமார், ராஜா, தம்மா ஆகிய மூவரும் தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் திருமணம் செய்து கொள்ள குடும்பத்தாரிடம் அனுமதி வாங்க, அர்பித்தா பாலின் காதலர் பிரசஞ்சித் கோஷ் மேற்குவங்கம் சென்றதை தங்களுக்கு சாதகமாக்கி நிதிஷ்குமார், ராஜா மற்றும் தர்மா ஆகியோர் நள்ளிரவு நேரங்களில் அர்பித்தா பால் தங்கியிருக்கும் விடுதிக்கு சென்று அவரை உடலுறுவுக்கு அழைத்தும் போன் மூலமாக அவரை மிரட்டியும் வந்துள்ளனர் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் அவர்கள், பிரசஞ்சித் கோஷுடன் திருமணம் செய்து கொள்ளக்கூடாது எனவும் மிரட்டி வந்துள்ளனர். இதனால் பயம் மற்றும் மன உளைச்சளில் இருந்த அர்பித்தா பால் கடந்த 3-ம் தேதி மாலை மேற்கு வங்கத்தில் இருந்து வந்த அவரது காதலர் பிரசிஞ்சித் கோஷுடன் திருவல்லிக்கேணி ஓயிட் ஹவுஸ் விடுதியில் கணவன்- மனைவி எனக் கூறி அறை எடுத்து தங்கி உள்ளனர்.

Also see... டோலுக்கு எப்படி பணம் எடுக்கலாம்..? ராகுல்காந்தி நடைபயணத்திற்கு சென்ற காங்கிரஸ்காரர்கள் சுங்கச்சாவடியில் வாக்குவாதம்

பின்பு கடிதம் எழுதி வைத்து இருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள் என்பதும் திருவல்லிக்கேணி போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து மிரட்டி தற்கொலைக்கு தூண்டியதாக (306 IPC) என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து ஹோட்டல் ஊழியர்களான ஆந்திராவைச் சேர்ந்த நிதிஷ்குமார், திருவண்ணாமலையைச் சேர்ந்த ராஜா ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தர்மாவை போலீசார் தேடி வருகின்றனர்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Chennai, Commit suicide, Crime News, Lovers

அடுத்த செய்தி