ஹோம் /நியூஸ் /சென்னை /

மழைக்கு நேற்று ஒரேநாளில் 3 நபர்கள், 25 கால்நடைகள் பலி.. வடகிழக்கு பருவமழை அப்டேட்..

மழைக்கு நேற்று ஒரேநாளில் 3 நபர்கள், 25 கால்நடைகள் பலி.. வடகிழக்கு பருவமழை அப்டேட்..

மாதிரி படம்

மாதிரி படம்

Weather Update | இறந்த நபர்களது குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தமிழ்நாட்டில் 37 மாவட்டங்களில் நேற்று 10.04 மி.மீ மழை பெய்துள்ளது. இதில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 45.93 மி.மீ. பெய்துள்ளது.

  மழை காரணமாக தமிழகத்தில் நேற்று சென்னை மாவட்டத்தில் 2 மனித உயிரிழப்பு, திருவாரூர் மாவட்டத்தில் ஒரு மனித உயிரிழப்பு என ஆக மொத்தம் 3 மனித உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. வடகிழக்கு பருவமழை காலத்தில் மொத்தம் 26 உயிரிழப்புகள் பதிவாகியுள்ள நிலையில், இறந்த நபர்களது குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  இதையும் படிங்க : தமிழகத்தில் 8-ம் தேதி வரை மழை தொடரும் : வானிலை மையம் எச்சரிக்கை!

  மேலும், தமிழ்நாட்டில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக

  25 கால்நடை இறப்புகள் பதிவாகியுள்ளது. 140 குடிசைகள் மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளன. பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிக்கு மட்டும் 17 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதர மாவட்டங்களுக்கு மொத்தம் 43 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

  திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு கூடுதலாக தலா 2 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 4.11.2022 முடிய பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் கனமழை காரணமாக விழுந்த 64 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன.

  இன்று (5.11.2022) விழுந்த 1 மரத்தை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் மழை நீரை வெளியேற்ற 763 நீர் இறைப்பான்கள் தயாராக உள்ளன. மழை நீர் தேங்கியுள்ள இடங்களில் 250 நீர் இறைப்பான்கள் பயன்படுத்தப்பட்டு மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

  169 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இவற்றில் 2 நிவாரண மையங்களில் 35 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

  இதையும் படிங்க : வங்கக் கடலில் 9ஆம் தேதி உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.. எங்கெல்லாம் பாதிப்பு தெரியுமா?

  மழை நீர் தேங்கியுள்ளதால் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இன்று (5-11-2022) 23,838 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த 4 நாட்களுக்கான முன்னெச்சரிக்கை இந்திய வானிலை ஆய்வு மையம் மூலமாக வரப்பெற்றுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Karthi K
  First published:

  Tags: Tamilnadu, Weather News in Tamil