ஹோம் /நியூஸ் /சென்னை /

வடகிழக்கு பருவமழை : சென்னையில் தயார் நிலையில் 24 மணிநேர கட்டுப்பாட்டு அறை!

வடகிழக்கு பருவமழை : சென்னையில் தயார் நிலையில் 24 மணிநேர கட்டுப்பாட்டு அறை!

வடகிழக்கு பருவமழை கட்டுப்பாட்டு அறை

வடகிழக்கு பருவமழை கட்டுப்பாட்டு அறை

Chennai Rain | வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சியில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய வகையில் உயர்ந்த தொழில்நுட்ப வசதிகளுடன் கட்டுப்பாட்டு அறை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சியில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய வகையில் உயர்ந்த தொழில்நுட்ப வசதிகளுடன் கட்டுப்பாட்டு அறை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் அமைக்கப்பட்டிருக்கக்கூடிய இந்த கட்டுப்பாட்டு அறையில் சென்னையில் உள்ள சுரங்க பாதைகளை நேரடியாக கண்காணிக்க முடியும். சுரங்க பாதையில் அதிகமாக தண்ணீர் தேங்கும் பட்சத்தில் உடனடியாக ரெட் அலார்ட் கட்டுப்பாட்டறைக்கு வரும். அதே போல பெரிய நீர்த்தேக்கங்கள், முகத்துவாரங்கள் அனைத்தை நேரடியாக கண்காணிக்க கூடிய வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது.

1913 என்ற உதவி எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். ஒரே நேரத்தில் 15 பேர் தொடர்பு கொள்ளும் முடியும். பேரிடர் நேரத்தில்  இந்த எண்ணிக்கையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளும் இந்த கட்டுப்பாட்டு அறையில் இடம்பெற்றுள்ளனர்.

இதையும் படிங்க : மழைநீர் தேங்கினால் அனைவரும் சஸ்பெண்ட் - சென்னையில் ஆய்வுசெய்த தலைமை செயலர் இறையன்பு எச்சரிக்கை!

மொத்தம் 100 ஊழியர்களை கொண்டு, 24 மணி நேரமும் இயங்கக்கூடிய வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் 100 இடங்களில் மாநகராட்சி சார்பில் டிஸ்ப்ளே (Display) அறிவிப்பு பலகை அமைக்கப்பட்டிருக்கிறது.

கட்டுப்பாட்டு அறையில் இருந்து வழங்கக்கூடிய தகவல்கள், டிஸ்ப்ளேயில் ஒளிபரப்பாகும். மேலும் ஒவ்வொரு வார்டு வாரியாக, அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறதா? எவ்வளவு இடங்களில் மழைநீர் தேங்கி இருக்கிறது? மரங்கள் விழுந்துள்ளனவா? எங்கெங்கெல்லாம் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது?  படகுகள், பொக்லைன் உள்ளிட்ட இயந்திரங்கள் எங்கெங்கெல்லாம் இருக்கிறது உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இந்த கட்டுப்பாட்டு அறையில் இடம் பெற்றுள்ளன.

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் அதிக தொழில்நுட்ப வசதியுடன் இந்த முறை பருவமழை எதிர் கொள்ள சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது. மேலும், அவசர காலங்களில் உயர் அதிகாரிகள் இந்த கட்டுப்பாட்டு அறையிலிருந்து செயல்படுவதற்காக வார் ரூம்மும்(war room) அமைக்கப்பட்டுள்ளது. பெரிய பேரிடர் ஏற்பட்டு தகவல் தொடர்பு பாதிக்கப்படும் சூழல் ஏற்படும் பட்சத்தில் மாற்று ஏற்பாடாக, நடமாடும் கட்டுப்பாட்டு அறையும் சென்னை மாநகராட்சி தயார் நிலையில் வைத்துள்ளது.

Published by:Karthi K
First published:

Tags: Chennai, Chennai Rain