ஹோம் /நியூஸ் /சென்னை /

செல்போன் திருடனால் பறிபோன வடமாநில வாலிபர் உயிர்... கொருக்குப்பேட்டையில் சோகம்!

செல்போன் திருடனால் பறிபோன வடமாநில வாலிபர் உயிர்... கொருக்குப்பேட்டையில் சோகம்!

உயிரிழந்த வாலிபர்

உயிரிழந்த வாலிபர்

Crime News : சென்னை கொருக்குப்பேட்டையில் மர்ம நபரிடமிருந்து செல்போனை மீட்க முயன்றபோது ரயிலில் இருந்து தவறி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

சென்னை சென்ட்ரல் நிலையத்திலிருந்து விஜயவாடா செல்லும் கோரமண்டல் விரைவு ரயிலில் நேற்று முன்தினம் மாலை மேற்கு வங்காளத்தை சேர்ந்த ரோனி (24) மற்றும் அஷ்ரப் ஷேக்(22) ஆகிய இருவரும் பயணம் செய்தனர். அப்போது கொருக்குபேட்டை ரயில் நிலையத்திற்கும், பேஷன் பிரிட்ஜ் ரயில் நிலையத்திற்கு இடையே ரயில் வந்துகொண்டிருந்தபோது படியில் நின்று ரோனி தனது செல்போனை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது 20 வயது மதிக்க தக்க மர்ம நபர் ரோனியின் செல்போனை பறிக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த ரோனி தனது செல்போனை அவரிடமிருந்து மீட்பதற்காக முயற்சி செய்தபோது ரயிலிலிருந்து கீழே விழுந்தார்.

அப்போது, ரோனியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த  கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் மீட்டு  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரோனியின் சடலத்தை மீட்டு ஸ்டான்லி அரசு  மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேசின் பிரிட்ஜ் - கொருக்குப்பேட்டை இடையிலான ரயில் பாதையில் மர்ம நபர்கள் ரயிலில் செல்லும் நபர்களிடம் இருந்து செல்போன் வழிப்பறியில் ஈடுபடுவதும் தொடர்கதையாகி வருகிறது. எனவே, உயர் அதிகாரிகள் தலையிட்டு வழிப்பறி செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து ரயில் பயணிகள் கூறுகையில், “பெரும்பாலும் இந்த பகுதிகளில் செல்போன் பறிப்புகள் அதிகமாக நடக்கிறது. இந்த பகுதியில் சிசிடிவி கேமரா பொருத்தப்படவில்லை. இதனால் செல்போன் பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. எனவே, இந்த சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்றால் செல்போன்களை வாங்கும் கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு எடுத்தால் இதுபோன்ற குற்றச்சம்பவங்கள் நடக்காமல் இருக்கும்” என தெரிவித்தனர்.

செய்தியாளர் : அசோக்குமார் - சென்னை

First published:

Tags: Chennai, Crime News, Local News