ஹோம் /நியூஸ் /சென்னை /

பல்லாவரம் வார சந்தையில் கஞ்சா விற்க திட்டம்.. கையும் களவுமாக சிக்கிய வடமாநில இளைஞர்கள்

பல்லாவரம் வார சந்தையில் கஞ்சா விற்க திட்டம்.. கையும் களவுமாக சிக்கிய வடமாநில இளைஞர்கள்

கைது செய்யப்பட்டுள்ள வட மாநில இளைஞர்கள்

கைது செய்யப்பட்டுள்ள வட மாநில இளைஞர்கள்

Crime News | திரிபுராவை சேர்ந்தவர் 3பேர் தாம்பரம் கடப்பேரி பகுதியில் அறை எடுத்து தங்கி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளனர்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

பல்லாவரம் வார சந்தையில் கஞ்சா விற்பனை செய்ய திட்டம் தீட்டிய 3 பேர் கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை பல்லாவரம் ரேடியல் சாலையில் கஞ்சா அமோகமாக விற்பனை நடைபெறுவதாக பள்ளிக்கரணை மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த பகுதியில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள முற்புதரில் சந்தேகத்திற்கு இடமாக நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்த ஒரு நபரை பிடித்து விசாரித்தனர்.

இந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். பின்னர் அந்த நபரை சோதனை செய்த போலீசார் அவரிடம்  இருந்து கல்லூரி மாணவர் ஒருவருக்கு விற்பதற்காக வைத்திருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.  அதில் பல்லாவரத்தில் வெள்ளிக்கிழமை மட்டும் நடைபெறும் வாரச்சந்தையில் கஞ்சா விற்பதற்காக மூன்று பேர் சேர்ந்து திட்டம் தீட்டியது தெரியவந்தது.

அதனை தொடர்ந்து அவரின் கூட்டாளியான தாம்பரம் கடப்பேரி பகுதியைச்  சார்ந்த சல்மான் ஹோசைன் (24) வீட்டில் போலீஸார்  சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது 12 கிலோ கஞ்சா ஒரு செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அவரின் கூட்டாளியான ஆலம்கிர் ஹொசைன் (22) பிலால் மியா (23) உள்ளிட்டோரை தாம்பரம் காவல் நிலையத்திற்கு அழைத்து  சென்ற  தாம்பரம் போலீசார் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் திரிபுராவை சேர்ந்தவர் மூவரும் தாம்பரம் கடப்பேரி பகுதியில் அறை எடுத்து தங்கி தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவர்களை குறிவைத்தும் மக்கள் அதிகமாக கூடும்  இடங்களிலும் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

செய்தியாளர்: சுரேஷ்

First published:

Tags: Cannabis, Chennai, Crime News, Ganja