தமிழர்கள் எனும் தகுதியை இழந்தால் வாழ்ந்தும் பயனில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை நந்தனத்தில் வரும் 22-ம் தேதி வரை 46-வது சென்னை புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. இதற்காக அங்கு 1000 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த புத்தக கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். பின்னர், கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை பார்வையிட்டார்.
புத்தக கண்காட்சி தொடக்க விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 6 பேருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி விருது வழங்கினார். 2023-ம் ஆண்டுக்கான நாவலுக்காக தேவி பாரதி, சிறுகதைகளுக்காக சந்திரா தங்கராஜ், கவிதைக்காக தேவதேவன் உள்ளிட்டோருக்கு விருது வழங்கப்பட்டது. மேலும், மொழிபெயர்ப்புக்காக சி.மோகனுக்கும், நாடகத்திற்காக பிரளயனுக்கும் உரைநடை மற்றும் ஆய்வுக்காக பேராசிரியர் பா. ரா. சுப்பிரமணியனுக்கும் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி விருது வழங்கினார். பின்னர் 9 பேருக்கு பபாசி விருதுகளையும் வழங்கினார்.
பின்னர் மேடையில் பேசிய முதலமைச்சர், பதிப்பகங்களுடன் போட்டிப்போட்டு தமிழ்நாடு அரசும் நூல்களை வெளியிட்டு வருவதாக தெரிவித்தார். எழுத்தும் இலக்கியமும் மொழியை வளர்த்து, காத்து வருவதாகவும் கூறினார். புத்தக கண்காட்சிகளும் இலக்கிய விழாக்களும் இளைஞர்களிடம் தமிழ் உணர்வு ஊட்டுவதற்கு பயன்பட வேண்டும் என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “மொழி சிதைந்தால் இனம் சிதையும், இனம் சிதைந்தால் பண்பாடு சிதையும், பண்பாடு சிதைந்தால் அடையாளத்தை இழப்போம். தமிழர் என்ற அடையாளம் இல்லாமல் வாழ்ந்தும் பயன் இல்லை” என தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Book Fair, Chennai book fair, CM MK Stalin