Home /News /chennai /

நான் டார்ச்சர் செய்கிறேனா.. ஜெ.தீபாவின் குற்றச்சாட்டை மறுக்கும் மாதவன் - என்ன தான் பிரச்னை?

நான் டார்ச்சர் செய்கிறேனா.. ஜெ.தீபாவின் குற்றச்சாட்டை மறுக்கும் மாதவன் - என்ன தான் பிரச்னை?

மனைவி தீபாவுடன் மாதவன்

மனைவி தீபாவுடன் மாதவன்

தனது கணவர் மாதவன் தன்னை விவாகரத்து கேட்டு தொல்லை செய்வதாக ஜெ தீபா வாட்ஸ் ஆப் ஸ்டேடஸ் வைத்து சிறிது நேரத்தில் டெலீட் செய்து விட்டார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா மற்றும் அவரது கணவர் மாதவனுக்கு இடையே மோதல் என்ற செய்திகள் வந்து கொண்டிருந்த நிலையில், இருவருக்கும் இடையே விவாகரத்து ஏற்பட போகிறது என்ற தகவல் நேற்று உலாவத் தொடங்கியது. தனது கணவர் மாதவன் தன்னை விவாகரத்து கேட்டு தொல்லை செய்வதாக ஜெ.தீபா வாட்ஸ் ஆப் ஸ்டேடஸ் வைத்து சிறிது நேரத்தில் டெலீட் செய்து விட்டார்.

    தீபாவுடன் மாதவன் ஆறு மாதமாக சண்டை செய்து வருவதாகவும் தன்னிடம் விவாகரத்து கேட்டு தொல்லை தருவதாகவும் தீபா புகார் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. இதை அவரது கணவர் மாதவன் தற்போது மறுத்துள்ளார்.

    இது தொடர்பாக மாதவன் கூறியதாவது: "எனது மனைவி தீபா என்னைப் பற்றி அளித்த செய்தியினை மறுக்கிறேன்.தீபாவின் உடல்நிலை குறித்து எனக்கு முழு அக்கறை உள்ளது. நான் தான் அவரை இன்றுவரை மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்று முழுமையாக பார்த்துக்கொள்கிறேன். அவர் தற்பொழுது மருத்துவ சிகிச்சையில் உள்ளார்.மருந்தின் தாக்கம் அவரிடத்தில் உள்ளது. அவரை விவாகரத்து செய்யும் எண்ணம் எனக்கு துளியும் இல்லை. அதற்கான அவசியமும் இல்லை.

    இதையும் படிங்க: "சிறுமி டான்யாவுடன் புன்னகையைப் பரிமாறிக் கொண்டேன்" - முதல்வர் ஸ்டாலின் ட்வீட்

    சராசரியாக எல்லா வீடுகளிலும் நடக்கும் குடும்ப தகராறு தான்.
    அவர் ஏதோ கோபத்தில் வாட்ஸ் ஆப்பில் ஸடே்டஸ் போட்டுள்ளார். அவரை அன்று போல் இன்றும் நேசிக்கிறேன்.அவர்மீது எள்ளளவும் மாறாத அன்பும் பிரியமும் கொண்டிருக்கிறேன். அவரை விவாகரத்து செய்யும் எண்ணம் துளியும் இல்லை.
    இதுவும் கடந்துப் போகும்." இவ்வாறு தனது மறுப்பை தெரிவித்துள்ளார்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Deepa, Deepa madhavan

    அடுத்த செய்தி