Home /News /chennai /

3 நாட்களில் சரி ஆகிவிடும் காய்ச்சலுக்காக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க முடியாது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

3 நாட்களில் சரி ஆகிவிடும் காய்ச்சலுக்காக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க முடியாது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டு பதற்ற நிலையை உருவாக்க வேண்டாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
3 நாட்களில் சரி ஆகிவிடும் காய்ச்சலுக்கு எல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க இயலாது எனவும் குழந்தைகளை காப்பாற்ற வேண்டிய அவசியம் வந்தால் முதலில் அரசு தான் நிற்கும் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னைப் பள்ளிகளுக்கான இலச்சினை மற்றும் குறும்படம் வெளியிடுதல் நிகழ்ச்சி, ரிப்பன் கட்டிட வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் நடைபெற்றது. அமைச்சர்கள் கே.என் நேரு, மா.சுப்பிரமணியன், சேகர் பாபு உள்ளிட்டோர் இலச்சினை மற்றும் குறும்படத்தை இணைந்து வெளியிட்டனர். மேலும் ஆசிரியர் தினத்தையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார் மற்றும் ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றனர். அப்போது நிகழ்ச்சியில் பேசிய சென்னை மேயர் பிரியா, மாணவரின் வாழ்க்கையில் ஒவ்வொரு ஆசிரியரும் ரோல் மாடலாக இருப்பார்கள். சென்னை மாநகராட்சி பள்ளிகளிலும் தனியார் பள்ளிகளுக்கு நிகராக கல்வி வழங்குகிறோம் என்ற நோக்கில் இலச்சினை மற்றும் குறும்படம் வெளியிட்டுள்ளோம் என கூறினார்.

இதையும் வாசிக்க: திமுகவில் இருந்து சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகல் - காரணம் இதுதான்!

இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “பள்ளிகளுக்கு விடுமுறை கொடுங்கள் என 10க்கும் மேற்பட்ட அரசியல் கட்சி தலைவர்கள் அறிக்கை மூலம் வலியுறுத்துகிறார்கள். 3 நாட்களில் சரி ஆகிவிடும் காய்ச்சலுக்கு எப்படி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க முடியும். குழந்தைகளை காப்பாற்ற வேண்டிய அவசியம் வந்தால். முதலில் அரசு தான் நிற்கும். பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய நிலை இல்லை” என கூறினார். மேலும் தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டு பதற்ற நிலையை உருவாக்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார்.
Published by:Siddharthan Ashokan
First published:

Tags: Chennai Mayor, KN Nerhu, Ma subramanian, Minister Sekar Babu

அடுத்த செய்தி