Home /News /chennai /

ஓபிஎஸ்க்கு உழைக்காமலேயே பதவி வேண்டும்.. அதிமுகவுக்கு எதிராக செயல்படுபவர் உடன் எப்படி சேர முடியும் - இபிஎஸ்

ஓபிஎஸ்க்கு உழைக்காமலேயே பதவி வேண்டும்.. அதிமுகவுக்கு எதிராக செயல்படுபவர் உடன் எப்படி சேர முடியும் - இபிஎஸ்

பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்பட வாய்ப்பில்லை - எடப்பாடி திட்டவட்டம்

பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்பட வாய்ப்பில்லை - எடப்பாடி திட்டவட்டம்

மீண்டும் ஒன்றாக இணைந்து செயல்படலாம் என பன்னீர்செல்வம் விடுத்த அழைப்பை எடப்பாடி பழனிசாமி நிராகரித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    அதிமுக கட்சியின் உட்கட்சி குழப்பத்தில் முக்கிய திருப்புமுனையாக, பொதுக்குழுவுக்கு எதிராக ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் நேற்று வழங்கியது. அதில், ஜூன் 23ம் தேதிக்கு முன்பிருந்த நிலையே தொடர வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி, கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானது செல்லாது, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி என்ற பழைய நிலையே தொடரும் என்பதை நீதிமன்ற தீர்ப்பு உருவாக்கியுள்ளது.

    இந்நிலையில் சென்னையில்  ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது “ அதிமுகவில் உள்ள ஒன்றரை கோடி தொண்டர்களுக்கு நன்றி. எங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அசாதாரண சூழல் அதிமுகவில் ஏற்பட்டுள்ளது , அவற்றை மனதில் இருந்து அப்புறப்படுத்தி கட்சி ஒன்றுபட வேண்டும். மீண்டும் ஆளும் நிலைக்கு அதிமுக வர வேண்டும். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் , எங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் பரவாயில்லை" எனக் கருத்து தெரிவித்தார்.

    இதன் மூலம் கட்சியில் மீண்டும் ஒன்றிணைந்து செயல்பட எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரின் தரப்புக்கு பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில், பன்னீர்செல்வம் விடுத்த அழைப்பை எடப்பாடி பழனிசாமி நிராகரித்துள்ளார். இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி  கூறுகையில், "கட்சி பொதுக்குழுவுக்கு எதிராக நீதிமன்றத்தில் தடை கேட்டவர் பன்னீர் செல்வம், அத்தோடு கட்சியின் பொதுக்குழு நடைபெற்ற போது கட்சி அலுவலத்தை சேதப்படுத்தி கட்சியை பன்னீர்செல்வம் அவமதித்தார். கட்சி தொண்டர்களின் மனதை வேதனைப்படுத்திய பன்னீர்செல்வத்துடன் எப்படி இணைந்து செயல்பட முடியும். நான் என்றும் பதவிக்கு ஆசைப்படுபவன் இல்லை.

    எப்போதும் சொந்த காலில் நிற்க விரும்புபவன். பன்னீர்செல்வத்திற்கு பலம் இருந்தால் அதை பொதுக்குழுவில் நிரூபித்திருக்கலாம். ஒவ்வொரு முறையும் கட்சிக்கு தொந்தரவு தரும் விதமாக விரோதமான செயல்களில் பன்னீர்செல்வம் ஈடுபட்டுவருகிறார். பன்னீர்செல்வத்தின் மகனான எம்பி ரவீந்திரநாத் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து திமுக சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறது என புகழ்கிறார். இதை அதிமுக தொண்டர்கள் எவ்வாறு ஏற்பார்கள். இவ்வாறு பன்னீர்செல்வம் அவரை சார்ந்தவர்கள் கட்சிக்கு விரோத நடவடிக்கையில் செய்து வருவதால், தொண்டர்களின் விருப்பத்தின் பேரிலேயே பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றைத் தலைமையை தேர்வு செய்தார்கள்.

    இதையும் படிங்க: அகவிலைப்படி யாருக்கெல்லாம் உயர்த்தி வழங்கப்படும்? தமிழக அரசு விளக்கம்

    பன்னீர்செல்வம் தனக்கு இருக்கும் பதவிக்காக மாறி மாறி பேசி செயல்பட்டுவருகிறார். எனவே, தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்து சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்" என பேட்டியில் தெரிவித்தார்.
    Published by:Kannan V
    First published:

    Tags: AIADMK, Edappadi Palanisami, OPS, OPS - EPS

    அடுத்த செய்தி