முகப்பு /செய்தி /சென்னை /  Exclusive : ஹிந்தி கற்றால் தமிழ் பற்று குறையாது - நியூஸ் 18 நிகழ்ச்சியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு

 Exclusive : ஹிந்தி கற்றால் தமிழ் பற்று குறையாது - நியூஸ் 18 நிகழ்ச்சியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

பெரும்பான்மை மக்களுக்கு உதவும் அடிப்படை தேவைகள் மட்டுமே நலத்திட்டங்கள், உதாரணத்திற்கு மருத்துவமனை, பள்ளிக்கூடம், சாலைகள் தான் நலத்திட்டங்கள். மற்ற திட்டங்கள் செய்தால் ஏற்கிறோம் ஆனால் மாநில பட்ஜெட்டுக்குள் செய்யுங்கள் - நிர்மலா சீதாராமன்

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Chennai, India

சிஎன்என் நியூஸ் 18 சார்பில் சென்னை ஐடிசி கிராண்ட் சோழாவில் நடைபெற்ற ‘தி டவுன் ஹால்’ கருத்தரங்கில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று பேசினார்.

அப்போது, தமிழ்நாடு மற்றும் தெற்கில் உள்ள மாநிலங்கள், தங்கள் வரி சுரண்டப்படுவதாக குற்றம்சாட்டுகின்றனர் என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “சில மாநிலங்களில் வளர்ச்சி வேகமாக நடைபெறும். தமிழ்நாடு பல்வேறு காரணங்களால் வேகமாக வளர்ந்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் சிறந்து விளங்கியதும் ஆங்கிலம் கல்வியில் சிறந்து விளங்கியதும் ஒரு முக்கியமான காரணம்.

மேலும் தமிழ்நாடு தொழிற்சாலைகள் அமைப்பதில் அதிக கவனம் செலுத்தியது. தமிழ்நாடு அதிகம் நகரமயமாக்கப்பட்ட மாநிலம், தொழில்நுட்ப துறை மற்றும் சேவை துறை மூலம்  நடைபெற்ற புரட்சி காரணமாக தமிழ்நாடு அதிகம் வளர்ச்சியடைந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் அதிகம் தருகிறோம். அதனால் எங்களுக்கு அதிகம் திருப்பி தர வேண்டும் என கேட்டால் அது நன்றாக இருக்காது.

தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்கள் இதேபோல் கேட்டால் கோயம்புத்தூர் மட்டும் தான் மாநிலத்தில் அதிக வருவாயை பெற்றிருக்க வேண்டும்” என தெரிவித்தார்.

மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி வருவாய் குறைந்தால் எப்படி மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியும் என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “மக்கள் தொகை கட்டுப்பாட்டை சரியாக கடைபிடித்ததால் நாங்கள் தண்டிக்கப்படுகிறோமா என அவர்கள் கேட்கிறனர். எனக்கு அது புரிகிறது. இது குறித்து நிதி ஆணையம் ஆலோசித்து வருகிறது. அதற்காக சீரமைப்பு செய்து வருகிறோம், எதிர்பார்த்த அளவிற்கு இல்லாவிட்டாலும் இயன்றதை செய்துள்ளோம்” என தெரிவித்தார்.

தான் படித்து கொண்டிருந்த போது ஹிந்திக்கு எதிராக தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டங்கள் குறித்து பேசிய நிர்மலா சீதாராமன், சமஸ்கிருதம், ஹிந்தி மொழி கற்ற மாணவர்களுக்கு மாநில அரசு வழங்கும் ஊக்கத்தொகை மறுக்கப்பட்டு வருதாக தெரிவித்திருந்தார். அது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, “ஹிந்தி, சமஸ்கிருந்தம் தேர்ந்தெடுப்போருக்கு ஸ்காலர்ஷிப் மறுக்கப்பட்டது உண்மை தான். இப்பொது வரை அது மறுக்கப்பட்டு தான் வருகிறது. நான் படித்த காலத்தில், ஹிந்தி படித்தால் தெருவில் நடக்கும் போது கீழ்தரமாக பேசுவார்கள்” என தெரிவித்தார்.

மேலும் சுதந்திரத்தின் போது அங்கிலேயர்களை வெளியேற கூடாது என சொன்னது நீதி கட்சி தான், அந்த மாடல் தான் திராவிட மாடல் என சொல்கிறனர். அதன்படி ஹிந்தி வரக்கூடாது என சொன்னால் அதை ஏற்க முடியாது என தெரிவித்த அவர், ஹிந்தி கற்றால் தமிழ் பற்று குறையாது என கூறினார்.

பாஜக இலவசங்கள் என கூறுவதை மற்ற கட்சிகள் சமூக நலத்திட்டங்கள் என கூறுகின்றனர் என எழுப்பபட்ட கேள்விக்கு, “பெரும்பான்மை மக்களுக்கு உதவும் அடிப்படை தேவைகள் மட்டுமே நலத்திட்டங்கள், உதாரணத்திற்கு மருத்துவமனை, பள்ளிக்கூடம், சாலைகள் தான் நலத்திட்டங்கள். மற்ற திட்டங்கள் செய்தால் ஏற்கிறோம் ஆனால் மாநில பட்ஜெட்டுக்குள் செய்யுங்கள்” என தெரிவித்தார்.

top videos

    டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது குறித்து எழுப்பட்ட கேள்விக்கு மற்ற நாடுகளில் பண மதிப்பு சரிந்துள்ளதை விட இந்தியா ரூபாயின் மதிப்பு குறைவாக தான் சரிந்துள்ளது அதனை சீர்செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம் என தெரிவித்தார்.

    First published:

    Tags: GST, Minister Nirmala Seetharaman, News18 Tamil Nadu