முகப்பு /செய்தி /சென்னை / தமிழகத்தில் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வுமையம்

தமிழகத்தில் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வுமையம்

மழை

மழை

Weather Update | சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

  • Last Updated :
  • Chennai, India

கேரள கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக 25.11.2022 முதல் 29.11.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : கோயில்களில் பின்பற்றப்படும் ஆகமம் தொடர்பான அறிக்கை விவகாரம்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்!

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை தண்டரம்பேட்டையில் 5 செ.மீ மழையும், செங்கம் மற்றும் மகாபலிபுரத்தில் 3 செ.மீ மழையும் பதிவிாகி உள்ளது. கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

top videos
    First published:

    Tags: Chennai, Weather News in Tamil