நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் வரைகலை பிரிவில் பணிபுரிந்து வந்த கலைவாணன் உடல்நலக் குறைவால் நேற்று உயிரிழந்தார். சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த 38 வயதான கலைவாணன் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் வரைகலை பிரிவில் பணியாற்றி வந்தார்.
செவ்வாய்க்கிழமை பிற்பகலில் வழக்கம் போல் பணியில் இருந்த போது திடீரென மயங்கி விழுந்த நிலையில், அவரை சக ஊழியர்கள் மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கலைவாணன் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கலைவாணன் உடல் கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனைக்கு பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மறைந்த கலைவாணனுக்கு மனைவி மற்றும் இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளன. கலைவாணனின் மறைவு சக ஊழியர்கள் மற்றும் ஊடகத் துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.
கலைவாணனின் மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர்கள் மன்றம் இரங்கல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்ட அறிக்கையில், ‘சமீப காலமாக உடல் நலக்குறைவு காரணமாக பத்திரிகையாளர்கள் இளம் வயதில் மரணமடையும் நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது என்பது வேதனை தரும் செய்தி.
நியூஸ்18 தமிழ்நாட்டில் பணியாற்றிவந்த கலைவாணன் உயிரிழந்த செய்தி தாங்க முடியாத மனவேதனையைத் தருகிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், சக ஊழியர்கள் அனைவருடனும் துயரத்தை பகிர்ந்து கொள்கிறோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai