ஹோம் /நியூஸ் /சென்னை /

புத்தாண்டில் வீட்டில் மதுகுடித்து நண்பர்களுடன் கும்மாளம் போட்ட கணவன்.. தட்டிக்கேட்ட மனைவி கழுத்தை நெறித்துக் கொலை

புத்தாண்டில் வீட்டில் மதுகுடித்து நண்பர்களுடன் கும்மாளம் போட்ட கணவன்.. தட்டிக்கேட்ட மனைவி கழுத்தை நெறித்துக் கொலை

நந்தகுமார் - பபிதா

நந்தகுமார் - பபிதா

Crime News : புத்தாண்டு கொண்டாட்டத்தில் வீட்டிலேயே மது அருந்தியதை கேட்ட மனைவியை கணவன் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

சென்னை தண்டையார்பேட்டை கருணாநிதி நகர் பகுதியில் வசித்து வருபவர் நந்தகுமார் (32). இவருக்கும் மணலியை சேர்ந்த பபிதா(30) என்ற பெண்ணுக்கும் சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர்   திருமணம் நடைபெற்ற நிலையில் 9வயதில் பெண்குழந்தையும் 7வயதில் ஆண்குழந்தையும் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 31ஆம் தேதி இரவு மனைவி பபிதாவை மணலியில் உள்ள அவரது தகப்பனார் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.தண்டையார்பேட்டையில்  உள்ள வீட்டில் தனது நண்பர்களோடு மது அருந்திவிட்டு புத்தாண்டு கொண்டாடியுள்ளார். மறுநாள் 1ஆம்தேதி அன்று மனைவி பபிதா வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீடு வீடாக இல்லாமல் பார்போல இருந்ததை கண்டு மனைவி பபிதா கணவரிடம் கோபப்பட்டு சண்டையிட்டதாக கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றவே மனைவியை புடவையால் கழுத்தை நெரித்து மெத்தை மீது தள்ளி விட்டு போதையில் கணவர் உறங்க சென்றுள்ளார்.

பின்னர் குழந்தைகள் இருவரும் தாயை எழுப்பியும் எழாததால் தந்தையிடம் குழந்தைகள் கூறவே மூச்சற்ற நிலையில் இருந்த பபிதாவை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டார் என கூறியுள்ளனர்.

மேலும் கழுத்தில் நெறிக்கப்பட்டதற்கான அறிகுறிகளும் காயங்களும் இருப்பதை கண்டு மருத்துவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த ஆர்.கே.நகர் போலீசார் நந்தகுமாரை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் நத்தகுமார் நடந்ததை ஒப்புகொண்டுள்ளார். பின்னர் கொலை செய்த குற்றத்திற்காக போலீசார் நந்தகுமார் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். புத்தாண்டு கொண்டாட்டத்தில் காலநேரம் மறந்து வீட்டிலேயே மது அருந்தியதை கேட்ட மனைவியை காதல் கணவன் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்: அசோக் குமார் (சென்னை)

First published:

Tags: Chennai, Crime News, Local News, New Year 2023, New Year Celebration, Tamil News