ஹோம் /நியூஸ் /சென்னை /

கோவைக்கு ரூ.2,700... நெல்லைக்கு 3,300... கொள்ளை கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.92,500 அபராதம்!

கோவைக்கு ரூ.2,700... நெல்லைக்கு 3,300... கொள்ளை கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.92,500 அபராதம்!

ஆம்னி பேருந்துகள்

ஆம்னி பேருந்துகள்

பெங்களூரு செல்லும் ஆம்னி பேருந்துகளில் 2,000 ரூபாயாகவும் கொச்சினுக்கு 2,700 ரூபாயாகவும் டிக்கெட் கட்டணம் உயர்ந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

தொடர் விடுமுறையையொட்டி சென்னையில் அதிக கட்டணம் வசூல் செய்த 49 ஆம்னி பேருந்துகளிடம் இருந்து 92,500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை தினங்களையொட்டி ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில், கோயம்பேடு மற்றும் போரூர் சுங்கச் சாவடிகளில் போக்குவரத்து சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் சோதனை நடத்தின. அப்போது, அதிக கட்டண வசூல் மற்றும் முறையாக வரி செலுத்தாதது கண்டறியப்பட்டு 49 ஆம்னி பேருந்துகளுக்கு 92,500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.

மேலும், 9 பயணிகளிடம் அதிகமாக வசூலிக்கப்பட்ட 9,200 ரூபாய் திரும்பிக் கொடுக்கப்பட்டது. மேலும், போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்கள் மீது இது போன்ற நடவடிக்கைகள் தொடரும் என சென்னை சரக இணை போக்குவரத்து ஆணையர் ரவிச்சந்திரன் எச்சரித்துள்ளார்.

அதே சமயம், புத்தாண்டையொட்டி சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் விலை இருமடங்காக உயர்ந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. கடந்த 24 ஆம் தேதி முதல் சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளில் கட்டணமாக 2,500 ரூபாயும் கோவை செல்ல 2,800 ரூபாயும் நெல்லைக்கு 3,300 ரூபாயும் வசூலிக்கப்பட்டதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு செல்லும் ஆம்னி பேருந்துகளில் 2,000 ரூபாயாகவும் கொச்சினுக்கு 2,700 ரூபாயாகவும் டிக்கெட் கட்டணம் உயர்ந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

First published:

Tags: Bus fare hike, Chennai, Koyambedu, New Year